¨ பெண்களே! வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள். நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள்மீது பழிசுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படாமல், இவர் இன்னாருடைய கணவன் என்று அழைக்கப்பட வேண்டும்.
(‘குடிஅரசு’ 5.6.1948)