வரலாற்றுப் பெட்டகமாய் ‘உண்மை!’

மார்ச் 1-15, 2021

வாசகர் மடல்

கடந்த ஜனவரி 1 – 15 ‘உண்மை’ இதழ் சிறப்பாக இருந்தது. ‘என்று ஒழியும் மூடத்தனம்?’ நமது ஆசிரியர் அய்யா அவர்களின் பயணம், பிரச்சார நிகழ்ச்சிகள் அடங்கிய பகுதிகள் (அய்யாவின் அடிச்சுவட்டில்) மிகப்பெரிய வரலாற்றுப் பெட்டகம். இந்த வரலாற்றுக் கட்டுரைகள் படிக்கும்போது அய்யாவின் பணிகள், தொண்டுகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. உலக அளவில் ஆசிரியர் அய்யாவைப் போன்று இடைவிடாமல் தொண்டு செய்து வருபவர்கள் தற்போது யாரும் இல்லை என்பதுதான் உண்மை. கேள்விகளின் நாயகர் பெரியார் பெருந்தொண்டர் அய்யா நெய்வேலி க.தியாகராஜன் அவர்களின் கேள்விகளை நீண்ட காலமாகப் படித்து வருகிறேன். அவரது இறப்பு நமக்குப் பேரிழப்பு. ‘உண்மை’ இதழ் ஓர் அறிவுக் கருவூலம். நன்றி!

_ கோ.வெற்றிவேந்தன்,

கன்னியாகுமரி.

——————

‘உண்மை’ பிப்ரவரி 1-15, 2021 படித்தேன். அதில் உள்ள ஒருவரிச் செய்தி, துணுக்குகள், கவிதை, உணவுமுறை என பகுத்தறிவோடு கலந்து வெளிவருவது சிறப்பானது. 1938இல் இந்தி எதிர்ப்பு மறியலில் 73 பெண்களும், 32 குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர் என்கிற பெருஞ்செய்தி நம்மை மிக்க வியப்பில் ஆழ்த்துகிறது. கவிக்கோ, பேரறிஞர் அண்ணா கவிதையில் அண்ணாவை முகில், வித்து என்கிறார். அண்ணாதுரை – பாச அண்ணா ஆனார் எல்லோருக்கும்.

– க.பழநிசாமி,

தெ.புதுப்பட்டி – 624 705  

—————–

மூடநம்பிக்கையின் மூடத்தனத்தைஅம்பலப்படுத்தும் உண்மை!

பிப்ரவரி 16-28 இதழ் உண்மையில் வெளிவந்த முகப்புக் கட்டுரை, மூடநம்பிக்கையின் மூடத்தனத்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது நடைபெற்று வந்த உயிர்பலிகள் அண்மைக் காலமாக அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்று வருவதும், இந்த நரபலி என்னும் ஆரியப் பண்பாடு எப்படி மெல்ல மெல்ல தமிழகத்தில் ஊடுருவியது என்பதனை அய்யா மஞ்சை வசந்தன் அவர்கள் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளது சிறப்பானது.  உண்மையில் பகுத்தறிவு வளரட்டும்.

– மல்லிகா, மாங்காடு.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *