12.1.2021 மத்திய அரசு கொள்முதல் செய்யும் ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசி விலை ரூ.210 – புனே சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு.
12.1.2021 சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை – வைகோ கைது.
13.1.2021 சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம் – விவசாய அமைப்புகள் அறிவிப்பு.
14.1.2021 இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானியர்கள்! உ.பி. பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத்சோம் பேச்சு.
15.1.2021 நாடு முழுவதும் 3,006 மய்யங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
15.1.2021 அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு குடியரசுத் தலைவர் ரூ. 5 லட்சம் நன்கொடை.
15.1.2021 தி.மு.க.வை தோற்கடிக்க சசிகலாவையும் ஏற்க வேண்டும் – ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் எஸ்.குருமூர்த்தி கருத்து.
15.1.2021 தபால்துறை தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம். அரசு ஆணையை தபால்துறை அதிகாரிகள் வெங்கடேசன் எம்.பி.யிடம் வழங்கினர்.
16.1.2021 திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இதுவே தருணம் – வைரமுத்து பேச்சு.
17.1.2021 கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் துவங்கியது.
18.1.2021 நீதிபதிகள் நியமனம் பற்றி கருத்து கூறி பின் வாங்கிய ஆடிட்டர் குருமுர்த்தி .
19.1.2021 புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
19.1.2021 பொதிகை டி,வி யில் சமஸ்கிருத செய்தி பிடிக்காவிட்டால் சேனலை மாற்றி கொள்ளுங்கள்.
திருப்பதி மலைப் பாதையில் திருடர்கள் பயம் – போலீஸில் பக்தர்கள் புகார்.
20.1.2021 போபாலில் உருட்டுக்கட்டை கத்திகளுடன் சென்று வி.எச்.பி கும்பல் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூல் .
20.1.2021 அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன் . முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றார்.
21.1.2021 தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6.26 கோடியாக உயர்வு.
22.1.2021 கப்பலை மோதவிட்டு படகை மூழ்கடித்ததில் ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் மரணம் – உடல் மீட்பு.
22.1.2021 மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது – மத்திய அரசு பதில் .
23.1.2021 ஸ்டெர்லைட் விவகாரம் சம்மந்தமாக தமிழக அரசின் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்.
24.1.2021 இந்து சமய அறநிலையத் துறையின் சென்னை மண்டல அலுவலகத்தை இரண்டாகப் பிரிக்க உத்தரவு.
24.1.2021 நாட்டிற்கு 4 தலைநகரக்ளை அமைக்க வேண்டும் வங்க – முதல்வர் மம்தா.
25.1.2021 ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்களை கரைவேட்டி கட்டி வர கட்டாயப் படுத்தும் அதிகாரிகள்.
25.1.2021 தேடப்படும் குற்றவாளிகள் புதுவை
பா.ஜ.க வில் விசாரணை நடத்த டி.ஜி.பிக்கு புதுவை முதல்வர் உத்தரவு.
26.1.2021 உழக்குடி கிராம அகழாய்வு – தொல்லியல் துறைக்கு மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு.
26.1.2021 சித்தூர் அருகே மந்திரவாதி கூறியதால் இரண்டு மகள்களை நரபலி கொடுத்த பேராசிரியர் தம்பதி.
27.1.2021 டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் போலீஸாரால் வன்முறை, வெறிச் செயல் – முதல் தகவல் அறிக்கை பதிவு.
27.1.2021 ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.
27.1.2021 பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை காலம் முடிந்து விடுதலையானார் சசிகலா.
(தொகுப்பு : மகிழ்)
Leave a Reply