எரிச்சல் உள்ள குடல், இரைப்பை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உணவு மோர். மோர் என்பது முதல் நாள் இரவு பாலைத் தோய்த்து 8 மணி நேரம் புளித்த தயிரை மோர் கடைந்து அந்த மோரை உட்கொள்ள வேண்டும்.
எட்டு மணி நேரம் புளிக்க விடாவிட்டால் அதில் குடலைக் காக்கும் நல்ல பாக்டீரியா உருவாகாது. அதிகம் புளித்த தயிரில் பாலைக் கலந்து உபயோகிப்பதும் தவறு. அது ஒரு பொருந்தா உணவாகி பசித்தீயைக் கொன்றுவிடும். தயிரை குளிர்ப் பதனப் பெட்டியில் வைத்து அதை நான்கைந்து நாள்களுக்கு மோராக கடைந்து உபயோகிப்பதும் தவறே.
சிரமம் பார்க்காமல் அன்றைய தேவைக்கேற்ப அன்றாடம் தயாரிக்கப்படும் மோர் ஒரு சிறந்த ‘குடல் காப்பான்’.