உண்மை சூன் 16- _ சூலை 15, 2020 படித்தேன். அதில் மானமிகு ஆசிரியர் அவர்கள் தலையங்கத்தில், இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையே ஆகும் என்கிறார்.
மருத்துவப் படிப்புகளில் பிற்படுத்தப்-பட்டோருக்குக் கிடைத்த இடம் “o’’
சட்டப் பிரிவுகள் தெளிவாக இருப்பதை நீதிபதிகள்தாம் ஏனோ தெளிவற்றவை என்கின்றனர். அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுவதற்கே பாதுகாப்பில்லையா?
இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி அடிப்படை உரிமை தான்.
9ஆம் அட்டவணையில் இருப்பதற்கு…
சமூக நீதிக்கு எதிராகவே _ வஞ்சகமாகவே மத்திய அரசு செயல்படுகிறது.
வழக்கு இருக்கின்றது; அதனால் இட ஒதுக்கீடு தரவில்லை என்று தப்பிக்கிறது.
ஆனால், உயர்ஜாதியினருக்கு வழங்கும் 10 விழுக்காட்டுச் சங்கதியும் வழக்கில் இருக்கிறது-தானே! ஆனாலும் அமல்படுத்தப்படுகிறது.
ஒரு கண்ணுக்குச் சுண்ணாம் பே!
பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சொல்லாது என்பதை மறைப்பதுதான் நீதியா?
ஏழைகள் வயிற்றில் நன்றாகவே அடிக்கிறார்கள்.
கொழுத்த சம்பளம் வாங்கும் உயர் ஜாதியினர் வயிற்றில் அறுத்து வைத்துக் கொட்டப்படும் இடங்கள் 635 என்பதைப் பார்த்து ஏழைகள் விடும் கண்ணீர்….?
– க.பழநிசாமி,
தெ.புதுப்பட்டி