வரலாற்றுச் சுவடுகள் – ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (4)

செப்டம்பர் 16-30, 2020

மானம் பெரிதா? சோறு பெரிதா?

சிலர் நம்முடைய நாட்டிலேகூட மானம் பெரிதா? _ சோறு பெரிதா? என்று – கேட்கின்றார்கள். மானம் அவ்வளவு பெரிதல்ல, சோறு தான் பெரிது என்று சொல்கின்றவர்களும் இருக்கின்றார்கள் (கை தட்டல்).

ஆக மனித முயற்சியினால் தான் உலகம் வளர்ந்து கொண்டு வருகின்றது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி பெரியாருடைய கொள்கைகளுக்கு, கோட்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன. ஆகவேதான் அறிந்தும், அறியாமலும் அத்துணை பேரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

சன்னதிக்கு மட்டும் தீவட்டி எதற்கு?

இன்றைக்கு மின்சார விளக்கைப் பயன்படுத்துகின்றான். காரைப் பயன்படுத்துகின்றான். ஆனால் கடவுள் சன்னதியிடம் மட்டும் தீவட்டி எடுத்துக் கொண்டு போகின்றான் (கை தட்டல்). அங்கே மட்டும் எதற்கு தீவட்டி? அது காட்டு மிராண்டி கண்டுபிடித்தது.

இன்றைக்கு எதற்கு கொண்டு சட்டி?

தந்தை பெரியார் ஒரு முறை சொன்னார். ஒருவன் செத்தவுடன் பிணத்தைச் சுமந்து கொண்டு செல்கின்றார்கள். எதற்குக் கூட செல்கின்றவன் நெருப்புச் சட்டியை எடுத்துக் கொண்டு போகின்றான்?

ஒரு காலத்திலே நெருப்பு கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும். – இன்னொரு அடுப்பு பற்ற வைக்க வேண்டுமானால் எரிகின்ற அடுப்பிலிருந்து ஒரு நெருப்பை எடுத்து அடுத்த அடுப்புக்குப் பற்ற வைப்பார்கள்.

ஆக, தீயை உண்டாக்க முடியாத காலத்தில் சுடுகாட்டில் நெருப்பு கிடைக்காது என்கிற காரணத்தினாலே வீட்டிலே இருந்து நெருப்பை சட்டியில் வைத்து தூக்கிக் கொண்டு போனான்.

தந்தை பெரியார் கேட்-டார். “இப்பொழுது எதற்கு நெருப்பைத் தூக்கிக் – கொண்டு போகின்றாய்?’’’ என்று கேட்டார் (சிரிப்பு – கை தட்டல்). இப்பொழுது தான் தீப்பெட்டி வந்திருக்கிறது பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கிழித்துப் பிணத்தின்மீது வைக்க வேண்டியது தானே? தீப்பெட்டியைக் கண்டுபிடித்த பிறகும் ஏன் கொண்டு சட்டி தூக்குகிறாய் என்று பெரியார் கேட்டார் (சிரிப்பு, கை தட்டல்). அறிவு இருக்கிறதா உனக்கு என்று கேட்டார்.

கடவுள் இதுவரை வரவில்லையே!

பெரியாரிடம் ஒருவர் வந்து கேட்டார், “இப்படி கடவுள் இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டு வருகிறீர்களே – திடீர்னு கடவுள் ஒரு நாள் வந்து உங்கள் முன்னால் நின்று நான் இருக்கிறேனே என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டார். பெரியார் அப்பொழுது சொன்னார்,

“அப்படி கடவுள் என் முன்னால் தோன்றினார் என்றால் இருக்கிறார் என்று சொல்லி விட்டுப் போகின்றேன்’’ (சிரிப்பு – கை தட்டல்).

“ஆக, கடவுள் இருந்து நான் இல்லை என்றா சொல்லுகின்றேன்? இது வரையிலும் அவர் வரவில்லையே, அதனால் இல்லை என்று – சொல்லுகின்றேன்’’ என்று சொன்னார்.

நம் நாடு அறிவுடைய நாடுதான்

நம்முடைய நாடு அறிவு பெற்ற நாடுதான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே திருக்குறளும், தொல்காப்பியமும் வந்து விட்டது. பேசினான் என்பதைச் சொல்ல 46 சொற்கள் உள்ளன. உரைத்தான் சொன்னான், பேசினான், கதறினான், இயம்பினான் என்று இப்படி 46 சொற்கள் உள்ளன. இதற்கு இலக்கணம் வகுத்து இது எழுவாய், பயனிலை. இது உயிர், மெய், சந்தி, விகாரம் என்று கண்டுபிடித்தான் என்றால் இவற்றை எல்லாம் எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே கண்டுபிடித்திருக்க வேண்டும்?

1999-ஆம் நூற்றாண்டிலிருந்து 2000 ஆம் நூற்றாண்டு வரைக்கும் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டி-லிருந்து இருபத்தி ஓராம் நூற்றாண்டு இன்னும் வேகமாக வளர்ந்திருக்கின்றது.

இன்றைக்கு அறிவு மழுங்கியிருக்கிறதே?

ஆனால், இலக்கணம், ஒரு சொல் வருவதற்குகிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. மற்ற நாட்டுக்கு இந்த நாடு அறிவைக் கற்றுக் கொடுத்தது. இன்றைக்கு அறிவு மழுங்கிக் கிடக்கிறது. முதன் முதலில் குமரிக் கண்டத்தில் தான்  உயிர் தோன்றிற்று என்றும், உயிர் தோன்றுவதற்கான தட்ப, வெப்பநிலை அங்கு தான் இருந்தது என்றும், பழங்காலத்து மக்கள் புழங்கிய பொருள்கள், இந்து மாக்கடலில்-தான் அதிகம் – கிடைத்தன என்றும், ஆரம்ப காலத்தினுடைய தன்மைகள் அங்கு-தான் இருந்திருக்க முடியும் என்றும் பல்வேறு மேல்நாட்டு அறிஞர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதுதான் தென்னாட்டு நாகரிகமாக ஆகியிருக்கிறது. இதுதான் மொகசஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகமாக ஆகியிருக்கிறது. பிறகு சுமேரிய நாகரிகமாக மாறி, பிறகு – அரபு நாகரிகமாக மாறி, பிறகு கிரேக்க நாகரிகமாக, ரோம் நாகரிகமாக ஆகியிருக்கிறது. பிறகு மாறி அய்ரோப்பிய கண்டம் பூராவும் பரவி, நாகரிகமும், பண்பாடும், அறிவுத் தன்மையும் பரவின என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றார்கள்.

பலவித நாகரிகங்கள்

குமரி நாகரிகம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லுகின்றார்கள். தென்னாட்டு திராவிட நாகரிகம் 5000 ஆண்டு-களுக்கு முற்பட்டது என்று சொல்கிறார்கள். 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது மொகஞ்ச-தாரோ நாகரிகம். — 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது சுமேரியர் நாகரிகம்.- 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது அரேபிய நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது- எகிப்து நாகரிகம். 2500ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்டது கிரேக்க நாகரிகம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ரோம் நாகரிகம்.

ஸ்பெயின் நாட்டு திராவிடன்

திராவிடன் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே -_ எம்.ஏ., படித்துக் கொண்டிருந்த பொழுது ஃபாதர் ஹீராஸ் மொகஞ்சதாரோ சொற்பொழிவாற்ற அங்கே மூன்று நாள்கள் வந்தார். அப்பொழுது அவருக்கு வயது 80 இருக்கும். கண்கூட சரியாகத் -தெரியாது. வெள்ளை வெளேர் என்று பெரியார்மாதிரி தாடி வைத்திருப்பார். அவர் மூன்றாவது நாள் கடைசியில் பேசி முடிக்கும் பொழுது ஒன்றைச் சொன்னார். இதுவரை நான் ஃபாதர் ஹீராசாகப் பேசவில்லை. ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த ஒரு திராவிடன் பேசுகிறேன் என்று சொன்னார். அதற்கு பல காரணங்கள் சொன்னார். உலகத்தில் முதன் முதலில் எண் 10 என்பதைக் கண்டுபிடித்தவன் தமிழன் தான் என்று சொன்னார்

வாரத்திற்கு ஏன் 7 நாள்கள்?

அது ஏன் 13 வரை போக வில்லை? அல்லது அது 8 வரை நின்றிருக்கலாம் அல்லவா? செல்பேசி எண் 10 என்பதை யார் கண்டுபிடித் யார்? எங்கிருந்து? எங்கு பரவியது? கோடி; பத்து ஆயிரம், இலட்சம், கோடி, பத்து கோடி என்ற ஆரம்ப எண்ணைக் கண்டுபிடித்தது இங்குதான். வாரத்திற்கு ஏன் 7 நாள்கள் என்று இருக்க வேண்டும்? வாரத்திற்கு 10 நாள்கள் இருக்கலாமா இல்லையா? வாரத்திற்கு

30 நாள்கள் இருக்கலாமா? இல்லையா? அந்த அய்டி யாவும் இங்கிருந்து தான் போனது என்று அவர் சொன்னார்.

சூரியனை வைத்து ஆண்டு கணக்கீடு

திங்களை வைத்து, சந்திரனை வைத்து, மாதத்தை  வைத்து கணக்கிடுவது இங்கிருந்து-தான் போனது என்று சொன்னார். அதனால்தான் வாரத்திற்கும் திங்கள் என்று எழுதுகின்றான். மாதத்திற்கும் திங்கள் – என்று எழுதுகின்றான். திங்களை வைத்து, சந்திரனை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது இங்கிருந்துதான் போனது என்று சொன்னார்.

கோள்களின் பெயர்களே-கிழமைகளுக்கும்

அதே மாதிரி கோள்களுக்குள்ள பெயரைத்தான் திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமை, புதன்கிழமை என்று சொன்னார். சங்க இலக்கியங்களில்கூட ஞாயிறு, திங்கள், புதன் என்ற பெயர்கள் இருக்கின்றன. திராவிடர்களின் ஞாயிற்றுக் கிழமையை சண்டே என்றும், திங்கள் கிழமையை மூண்டே என்றும் வெள் ளைக்காரர்கள் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார்கள்.

நம்முடைய அறிவு வீழ்வதற்குக் காரணம் என்னவென்றால், வேதம், இதிகாசம், புராணம் இவைகள் தாம்.

வீரமணி சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்

அறிவைப் பயன்படுத்தியதால்தான் ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் வளர்ந்தன. – நமது நாடும் அறிவைப்- பயன்படுத்தி வளர வேண்டும் என்பதற்காகத்-தான் பெரியார் அவர்கள் அறிவுக்கு மதிப்புத் தாருங்கள், அதற்கு ஆக்கம் தாருங்கள் என்றெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.

அத்தகைய கருத்துகளைப் பயன்படுத்த இந்த நாள் ஓர் எழுச்சி தரும் நாளாக அமைய வேண்டும் -_ என்பதற்காகத்தான் பெரியார் புத்தாயிரம் விழாவைக் – கொண்டாட அருமை நண்பர் வீரமணி அவர்கள். சிறப்பாக இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள்.

வேறு வகையில் போகும் நாடு பாழ்படும்

படிக்க முடியாவிட்டாலும், ஆராய முடியாவிட்டாலும் சொற்களைக் கேட்டு சிந்திக்க வேண்டும் என்று எடுத்துச் சொன்னார். ஆக பகுத்தறிவு நெறிதான் பண்பட்ட நெறி, பயன்படுத்தக் கூடிய நெறி, நேரத்தை வீணாக்காத நெறி, மனிதனுடைய நேரத்தையும், உழைப்பையும் பயன்படுத்து-வதற்குரிய நெறி. வேறு வகையில் போகுமேயானால் நாடு பாழ்படும். சமுதாயம் பாழ்படும். அதை எல்லாம் நீக்குவதற்கு பெரியாருடைய கொள்கைகள் பரவுதல் வேண்டும். பெரியார் புத்தாயிரம் பொலிவுமிக்க ஆயிரமாக….. ஆக பல்வேறு பழக்க வழக்கங்கள், குருட்டு நம்பிக்கைகளை அறிவியல், தொழில் நுட்பக் கருத்துகள் தூள் தூளாக்கி வருகின்றன. பல்வேறு புராணக் கருத்துகள் எல்லாம் தானாக மடிந்து கொண்டு வருகின்றன. எதிர்காலம் பெரியாருடைய புத்தாயிரம் பொலிவு மிக்க ஆயிரமாக, அறிவுமிக்க ஆயிரமாக,- ஆற்றலுக்கு மதிப்புத்தருகிற ஆயிரமாக, மனிதத் தன்மையை வளர்க்கின்ற ஆயிரமாக விளங்கும்.

வாழ்நாளில் ஒருவர் பெறக்கூடியது

வாழ்நாளில் ஒருவர் பெறக்கூடியது எது என்று கேட்டால் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கக் கற்றுக் கொள்ளுதல். இன்பமான முடிவைக் காணுகின்ற அளவுக்கு ஒவ்வொன்றும் நடக்க வேண்டும். அந்த நிலை எய்த வேண்டும் என்பதற்காகத்தான் பெரியார் அவர்கள் தன்னுடைய உழைப்பைச் செலுத்தினார்கள்.

பெரியார் அவர்கள் 95 வயது வரை நாடு, நகரம், பட்டித் தொட்டி எங்கும் சுற்றிச் சுழன்று வந்து இந்த நாட்டு மக்களுக்கு அறிவை உருவாக்கி அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கருதினார். நாம் ஒன்றுபட வேண்டும்

ஆண்டுதோறும் பெரியார் பெயரால் புத்தாயிரத்தை உண்டாக்கி இத்தகைய கருத்துகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் தர வேண்டும். அந்த வகையிலே இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை நான் மிக, மிகப் பாராட்டுகின்றேன். அந்த அளவுக்குப் பாடுபட நாம் அனைவரும் ஒன்றுபடுதல் வேண்டும்.

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி வேண்டும்;

விசை ஒடிந்த தேகத்தில் வலிமை வேண்டும்;

சூழ்ச்சிதனை, வஞ்சகத்தை பொறாமைதனை தொகையாக நிறுத்தி தூள் தூளாக்குகின்ற காட்சி மிக வேண்டும்; கடல் போல் செந்தமிழ் பெருக்க வேண்டும்

கீழ்ச் செயல்கள் விட வேண்டும்; பெரியார்தம் புகழ் சொல்லி வாழ்த்த வேண்டும், வேண்டும்;

அறிஞர் அண்ணா புகழ் சொல்லி வாழ்த்த வேண்டும் என்று கூறி விடைபெறுகின்றேன்.

இவ்வாறு டாக்டர் – நாவலர் உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *