சேச்சே… அவங்கல்லாம் மாறிட்டாங்க….
- – பவனாந்தி
ஆரிய – திராவிடப் போருன்னோ.. இதெல்லாம் பாப்பானுங்க வேலை என்று சொன்னாலோ,
அடப் போங்க சார்… நீங்கதான் இப்படிச் சொல்லிட்ருக்கீங்க… அவங்கள்லாம் மாறிட்டாங்க சார்… கறி, மீன்லாம் துன்றாங்க தெரியுமா என்று சத்தமாய்ச் சொல்லிவிட்டு சரக்கெல்லாம்கூட சாப்பிடுறாங்க சார் அப்படின்னு காதில் கிசுகிசுக்கும் அப்பாவிகளை நெறைய பார்த்திருக்கோம்.
அவங்கட்டல்லாம் எப்படிச் சொல்லிப் புரிய வைக்கிறது…
தண்ணியடிக்கிறதுனால… அதாவது சுரா பானம் சாப்பிடுறதுனாலதான் அவா சுரர், அந்தக் காலத்தில அந்தப் பானத்தைக் குடிக்காத நம்மாளைத்தான் அவன் அசுரர்னு சொன்னான். அதனால அவன் எப்பவுமே சரக்கு சாப்பிடுற ஆளுதான் அப்படின்னு!
சரி… அவங்கள்லாம் மாறிட்டாங்க! அப்படின்னு நாமளும் நம்புவோமேன்னு கண்ணை மூடுறதுக்குப் போனால், அந்த நேரத்தில பார்த்தா அந்த நிகழ்ச்சியைப் பார்த்துத் தொலைக்கணும். எந்திரனுக்கு எந்திரன்னு விளம்பரப்படுத்தி ரா-1 அப்படின்னு ஒரு இந்திப் படம் வந்துச்சு. அதுக்காக கதாநாயகன் ஷாருக்கான்கிட்ட பேட்டி எடுத்தாங்க ஒரு பெரியம்மா! அவங்க குடும்பமே ஒரு முற்போக்குக் குடும்பம் – அப்படித்தான் சொல்லிக்குவாங்க!
பிலிம் ரோலைக் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே சுயம்புவா சினிமாவைப் பத்தி யோசிச்சவர் இவங்க வூட்டுக்காரரு! 17 வயசுலேயே மார்க்சீய ஞானப்பால் குடிச்சு கம்யூனிஸ்டு மேடையிலேயே புத்தகம் வெளியிட்டவர்தான் இவங்க புள்ள!
18 வயசிலதான் கம்யூனிஸ்ட் கட்சி மெம்பர் ஆகமுடியும்கிறதெல்லாம் நம்மள மாதிரி ஆட்களுக்குத்தான் கட்டுப்பாடு! அவாள்லாம் மார்க்சிய திருஞானசம்பந்தன் போல – வாயைத் தொறந்தாலே வர்க்கப் போராட்டம் தான்!
அப்படி யாருப்பா அந்தம்மான்னு கேக்குறீங்களா? அவங்கதான் தமிழ்நாட்டு அறிவுஜீவிங்கள்ல ஓராளு – சுகாசினி! சரி இப்படிப்பட்ட முற்போக்கான ஆட்கள்லாம் இருக்கிறப்போ… அவங்க மாறிட்டாங்கன்னு சொல்றதில நியாயம் இருக்கத்தானே செய்யம்னுதான் அதுவரைய நினைச்சேன். பேட்டியில ஷாருக்கான், நான் படத்தில தமிழ் பேசி நடிக்கக் காரணம் ரசூல்பூக்குட்டி மற்றும் நிரஞ்சன்தான்னு சொன்னாரு.
அடடா… என்ன சந்தோசம்… பெருமை! வேகமா சொன்னாங்க பாருங்க அந்த ஞானத்தாய்! யா.. யா… நிரஞ்சன் அய்யங்கார். Actually he is from my community (ஆமாமா… அவரு எங்க ஜாதிக்காரரு தான்).
நமக்குத்தான் காதில சரியா விழலையோன்னு நெனச்சேன். மை கம்யூனிஸ்ட்_னு சொல்றதுக்குத்தான் மை கம்யூனிட்டினு சொல்றாங்களா? இல்ல… அழுத்தந் திருத்தமா கம்யூனிட்டின்னுதானே சொன்னாங்க. அவர் மட்டுமா உங்க கம்யூனிட்டி? கோயில்ல வச்சே கொலை பண்ண பெரியவா, கர்ப்பகிரகத்துக்குள்ள காமபூஜை நடத்தின தேவநாதன், கோடி கோடியா லஞ்சத்தில தங்கம் குவிச்ச கேத்தன் தேசாய்… இவாள்லாம் உங்க கிராண்ட் கம்யூனிட்டிலதான் இருக்கா. அவாளையும் சேர்த்தே பெரும பேசுங்கோளேன்!
ஆனாலும், எங்களவான்னு சொல்லாம எவ்ளோ முற்போக்கா மை கம்யூனிட்டினு சொல்லிருக்காங்க!
சேச்சே… அவங்கள்லாம் மாறிட்டாங்க?
____________________________
“அரசாங்கத்தில தகுதி, திறமையெல்லாம் மதிக்கிறதுக்கெல்லாம் ஆள் இல்ல சார்.. எங்க பார்த்தாலும் கோட்டா, ரிசர்வேசன்! சுத்த நான்சென்ஸ். பாருங்கோ.. பிரைவேட் செக்டார் என்னமா வளர்ந்திருக்கு… என் பேரன் அமெரிக்கால சிலிக்கான் வேலில ஒர்க் பண்றான். என் பேத்தி இங்கயே அமெரிக்கா காரன் கம்பெனியில ஒர்க் பண்றா. எல்லாம் எங்களவாதான். என்னமா பே பன்றான் தெரியுமோ என்று ஹிண்டு படிக்கும் மாமா பேசின்டிருப்பா…
ஆமா… அவங்கள்லாம் மாறிட்டாங்க… கவர்மெண்ட் பொதுப் பிரிவுல (50%) கூட நம்ம ஆட்களோட போட்டி போட முடியாம, பிரைவேட் கம்பெனிக்கு மாறிட்டாங்க!
“பே பால்னு (Pay pal) ஒரு அமெரிக்கக் கம்பெனியோட கிளை நிறுவனம் இ பே (e bay), சென்னை தகவல் தொடர்புச்சாலையில இருக்கிற அவங்க கம்பெனியோட ஆண்டு விழா கொண்டாடுறாங்களாம்… அதுக்கு விளையாட்டு, போட்டியெல்லாம் வைக்கிறாங்களாம்… சந்தோசம்… நடத்துங்க…
எப்படி டீம் பிரிச்சிருக்காங்க தெரியுமா? படேல்ஸ் ஆப் குஜராத், அய்யர்ஸ் ஆப் தமிழ்நாடு, பேனர்ஜீஸ் ஆப் பெங்கால், சிங்ஸ் ஆப் பஞ்சாப், டிசோசாஸ் ஆப் கோவா, நவாப்ஸ் ஆப் ஹைதராபாத்.
என்னாது… இப்படிப் பிரிச்சிருக்கிங்கன்னு கேட்டா… சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கட்டா நைட் ரைடர்ஸ், மும்பை இண்டியன்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் மாதிரி பேரு வச்சிருக்கோம்கிறான்.
நம்மூர்ல அணிகளுக்குப் பேரு வைக்கிற துன்னா என்ன வைப்போம்? மல்லிகை, ரோஜா, செம்பருத்தின்னு வைப்போம். இல்லன்னா… குறிஞ்சி, முல்லை, மருதம்…னு வைப்போம்.
சரி… நீ கம்ப்யூட்டர் கம்பெனிக்காரன். ஹார்டுடிஸ்க், கீ போர்டு, சிபியு இப்படி பேரு வை… வின்ட்டர், சம்மர்னு இங்கிலீஷ்ல வை… புரூஸ்லீ, ஜெட்லீன்னு சீனத்தில வை…
எதுக்கு ஜாதிப் பேரெல்லாம் வைக்கிறன்னா?
இல்லங்க… நேஷனல் இண்டகரேசன் பாருங்க… பஞ்சாப் சிங், ஹைதராபாத் நவாப், டீசோசான்னு மற்ற மதப்பேரெல்லாம் வச்சிருக்கோம்ங்கிறான்.
பஞ்சாப்-னா சிங்கு! அப்ப தமிழ்நாடுன்னா அய்யரா? அப்படின்னு கேட்டா…
கல்யாணத்தை தீம் (Theme) ஆக வச்சிருக்காங்க…
தமிழ்நாட்டை சேர்த்திருக்காங்க ளேன்னு பெருமைப்படுங்கன்னு நம்ம தமிழன் சப்பைக் கட்டு கட்டுறாங்க.
அங்கதான ராசா ஜாதி வந்து நிக்குது. அதைத்தானே ஒழிக்கணும்கிறோம்.
டிரஸ்கோட் (உடை அணியும் பழக்கம்) நல்லாயிருக்கும்னு இன்னொரு அறிவாளி.
சட்டையில்லாத மேலுடன் பஞ்சகச்சமும், மடிசாரும்தான் நல்ல உடையா? இரண்டுமே கவர்ச்சி உடைகள்பா.
சும்மா போட்டுட்டாங்க சார். வெறும் அய்யர் மட்டுமா போட்டிருக்காங்க… பாருங்க பானர்ஜி, படேல்லாம் போட்டிருக்காங்க.
பானர்ஜி வங்காளத்துப் பார்ப்பான்; படேல் குஜராத்ல உயர்ஜாதி. ஏன் மகர்ஸ் ஆப் மஹாராஷ்டிரா, அருந்ததியர்ஸ் ஆப் தமிழ்நாடு, மல்லாஸ் ஆப் பெங்கால்னு பேரு வைப்பாங்களா? வைச்சா இந்த Integration பேசுற Intellectuals அதில சேருவானா? ஏன்னா அவா பார்வையில இவங்கள்லாம் சூத்ராள், பஞ்சமா!
ஜாதிப் பேரைத் திரும்பக் கொண்டு வந்து அடையாளப்படுத்தனும்னு துடியா துடிக்கிறது, எங்களுக்கு நல்லாவே தெரியும். அதை வச்சு ஜாதிப் பெருமை பேசி, மத்தவங்களை இழிவுபடுத்தவும் எப்படியெல்லாம் யோசிக் கிறாங்க…
இந்தப் பிரச்சினையை சரியாகக் கையில் எடுத்திருக்காங்க, அதே மென் பொருள் துறையில் உள்ள தமிழ் உணர்வுள்ள சேவ் தமிழ் இயக்க இளைஞர்கள்.
(அதன் விளைவாக, நடந்த தவறுக்கும் உயர்ஜாதிப் பெருமை பேசியதற்கும் மன்னிப்புக் கேட்டிருக்கிறார் அந்நிறுவனத்தின் இந்திய உயரதிகாரி!)
எத்தியோப்பியன் நிறத்தை மாத்திக்கிட்டாலும், சிறுத்தை புள்ளியை மாத்திக்கிட்டா லும், பார்ப்பான் தன் குணத்தை மாத்திக்க மாட்டான்னு அன்னைக்கே எங்க முப்பாட்டன் சொல்லிட்டுப் போயிட்டாரு!
இனிமே எவனாவது சேச்சே… அவங்கள்லாம் மாறிட்டாங்கன்னு சொல்லிப்பாரு!