உலகில் இன்னொரு நாடு
வடக்கு சூடானிலிருந்து தெற்கு சூடான் தனி நாடாவதற்கு ஆதரவு தெரிவித்து, 97.5 சதவிகித தெற்கு சூடான் மக்கள் வாக்களித்து இருப்பதாக தேர்தல் கமிட்டியின் துணைத் தலைவர் டிமோன் வான் அறிவித்துள்ளார்.
தெற்கு சூடானின் தேர்தல் கமிசன் செய்தித் தொடர்பாளர் சுவாத் இப்ராகிம் இசா, சூடானில் பதிவு செய்யப்பட்டிருந்த 1,16,857 வாக்காளர்களில் 69, 597 பேர் வாக்களித்துள்ளனர். 41 சதவிகித மக்கள் ஒருங்கிணைப்புக்கும் 55 சதவிகித மக்கள் தனி நாட்டிற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர் என்று அந்நாட்டின் அதிகாரப்பூர்வ சுனா செய்தி ஏஜென்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடானின் 10 மாநிலங்களுள், தெற்கில் கிறிஸ்தவர்கள், ஆப்ரிக்கர்கள் அதிக அளவிலும் வடக்கில் முஸ்லிம்கள் அதிக அளவிலும் உள்ளனர்.
தெற்கு சூடான் அதிகாரப்பூர்வமாக தனி நாடாக அறிவிக்கப்படும்போது, அய்க்கிய நாடுகள் சபையின் 197 ஆவது உறுப்பு நாடாக, ஜூபாவைத் தலைநகராகக் கொண்டு திகழும்.
வருண தர்மத்திற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி
இளம் பழங்குடியினப் பெண் நிர்வாண நிலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டதை எதிர்த்து நீதி வழங்கக் கோரிய வழக்கில், மகாராஷ்டிர மாநில அகமது நகர் விசாரணை நீதிமன்றம் குற்றவாளி-களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
குற்றவாளிகளின் மேல் முறை-யீட்டை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அவர்களை விடுவித்தது. இந்த வழக்கின்மீது மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
துரோணாச்சாரியாரின் இச்செயல் மிகுந்த அவமானத்துக்கும், வெட்கத்-துக்கும் உரியது. ஏகலைவனின் வலது கை கட்டை விரலைக் குருதட்சணையாகக் கேட்க அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? அர்ஜூனனை விடச் சிறந்த வில்லாளியாக ஏகலைவன் வந்துவிடக் கூடாது என்பதற்காக அல்லவா அவர் இவ்வாறு செய்தார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜூ மற்றும் கியான் சுதா மிஸ்ரா கேள்வி எழுப்பி, பார்ப்பன வருண தருமத்திற்குச் சவுக்கடி கொடுத்துள்ளனர்.
மேலும், விசாரணை நீதிமன்றம் அளித்த சிறைத் தண்டனையை உறுதிப்படுத்தினர். இப்படியொரு கொ-டுமையான நிகழ்ச்சி நடந்திருக்கும்போது, குற்றம் சாட்டப்-பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்யாமல் இருந்தது தங்களுக்கு வியப்பளிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.