நெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் டாக்டராக முடியும்

பிப்ரவரி 16-29 2020

 

நாட்டின் மருத்துவக் கல்வியைச் சீரமைப்பதற்காக, தேசிய மருத்துவக் கமிஷனை அமைக்க, பிரதமர் மோடி தலைமையில் 17.7.2019இல் கூடிய, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்த, பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:

தேசிய மருத்துவ கமிஷனை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவக் கல்வியைச் சீரமைப்பதற்கான இந்த நடவடிக்கை, தற்போது செயல்பாட்டில் உள்ள, இந்திய மருத்துவ கவுன்சிலை மாற்றி அமைக்கும்.

இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள மசோதாவில், பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர், இறுதி ஆண்டில், ‘நேஷனல் எக்சிட் டெஸ்ட்’ எனப்படும், ‘நெக்ஸ்ட்’ தேர்வு எழுத வேண்டும். அது, இரு வித குறிக்கோள்களைக் கொண்டு உள்ளது. ஒன்று, இதில் வெற்றி பெறுபவர்கள் தான், இந்தியாவில் டாக்டராக பணியாற்ற முடியும். இரண்டாவது, இந்தத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களே, முதுகலை மருத்துவம் படிப்பதற்கான தகுதியாகக் கருதப்படும்.

மேலும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கும், இந்தத் தேர்வு, சோதனை தேர்வாக இருக்கும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற பின், இந்தியாவில் மருத்துவ சேவை புரிய, தனியாகத் தேர்வு எழுதத் தேவையில்லை. அதே நேரத்தில், ‘நீட்’ தேர்வு, பொதுவான கவுன்சிலிங் மற்றும் ‘நெக்ஸ்ட்’ தேர்வு மூலம் தான், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் படிக்க முடியும். இவ்வாறு, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

– (‘தினமலர்’ 18.7.2019)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *