“புலித்தோல் அரைக்கு இசைத்து வெள்ளெருக்கம்பூ சடைக்கு முடிந்து
சுடலைப் பொடி பூசி கொன்றைப் பூச்சூடி தும்பை மாலை அணிந்து
மண்டை ஓடு கையேந்தி எலும்பு வடம் தாங்கி
மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து
கோவண ஆண்டியாய் விடை (மாடு) ஏறி
ஒரு காலைத் தூக்கிக்கொண்டு பேயோடு ஆடுகிறவன்.. காட்டுமிராண்டியாய் இல்லாமல் நகரவாசி, நாகரிகக்காரனாக இருக்க முடியுமா?
சைவர்களே..!
சைவப் புலவர்களே..!
அருள்கூர்ந்து கூறுங்கள்.’’
– ஈ.வெ.ரா. (விடுதலை, 18.7.1956)
இந்தக் காட்டுமிராண்டிக்கால சிவனுக்குத்தான் மகா சிவராத்திரியாம்..!!
இவன் யோக்கியதை என்ன தெரியுமா?
தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் கற்பைச் சூறையாடியதால், ரிஷிகள் கொடுத்த சாபத்தினால் அவன் சிசுனம் (ஆண் குறி) அறுந்து வீழ, அதனைப் பார்வதி தாங்கிக் கொண்டாளாம்! அதுதான் சிவலிங்க உருவம் என்பது..!! என்கிறது லிங்கபுராணம்.
இப்படிப்பட்ட சிவன் ஒரு கடவுளா?