தகவல் களஞ்சியம்

பிப்ரவரி 01-15 2020

உலகின் மிகப் பெரிய அனகோண்டா என்னும் பாம்பு திரைப்படங்களில் காட்டப்படுவது போல் கொடூரமானது அல்ல.

22 அடி நீளம் வளரும். கோழி, வாத்து, ஆடு, நாய், மான், முயல் போன்றவற்றை உண்ணும். இதன் எடை 200 கிலோ. ஒரே தடவையில் 100 முட்டைகள் இடும். இதன் ஆயுட்காலம் சராசரி 40 ஆண்டுகள்.

******

ஜப்பானியர்கள் சாப்பிடுவதற்கு முன்பு ‘இட்டாகி மசூ’ என்று கூறுவார்கள். இதற்குப் பொருள் ‘இதைத் தயாரித்து வழங்கியவர்களுக்கு நன்றி’ என்பதாகும்.

******

‘பாபா பிளாக் ஷீப்’ என்னும் பாடல் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட பாடல் அல்ல. 1275ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு அதிக வரி விதித்ததை எதிர்த்து கேலி செய்து எழுதப்பட்ட பாடல்.

******

சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் ‘ராய் சவுத்திரி’

******

ஒரு வரிச் செய்திகள்

புறா 1000 கிலோ மீட்டர் வரை ஓய்வெடுக்காமல் பறக்கும்.

இரு தேசியக் கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.

ஸ்வீடன் நாட்டு சைக்கிள்களுக்குப் பூட்டு இல்லை. அங்கு சைக்கிள் திருடு போவதுமில்லை.

எகிப்தில் 76 பிரமிடுகள் உள்ளன.

கணிதத்தில் பயன்படுத்தும் கழித்தல் (- -) குறியைக் கண்டு பிடித்தவர் லியானார் டோவர்.

******

ஒரு யூனிட் இரத்தம் என்பது 350 மில்லி லிட்டர் அளவுகொண்ட உறைகளில் சேமிக்கப்படுவதாகும்.

இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் மாலை இதழ் ‘தி மெட்ராஸ் மெயில்’ 1862ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

பைக்கால் ஏரி ரஷிய நாட்டில் உள்ளது. இதுதான் உலகின் மிகப் பெரிய ஏரியாகும். இது யூரேஷியாவின் மிகப் பெரிய ஏரி. ஏரியின் தண்ணீர் கண்ணாடி போலத் தெளிவாக இருக்கும். 130 அடி ஆழம் வரை வெறும் கண்களால் பார்க்க முடியும்!

******

மனித மூளையில் நூறு டிரில்லியன் நரம்பிணைப்புகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பல நரம்பிணைப்புகள் இழக்கப்பட்டு புதிய நரம்பிணைப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. புதிய விஷயங்களை மூளை அறியும்போது புதிய நரம்பிணைப்பு உருவாகிறது. அதனால் ஒவ்வொரு நாளும் புதிதாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதனால் மூளைத் திசுக்கள் தேய்ந்தழியும் ‘அல்சைமர்’ நோயில் இருந்து தப்ப உதவும்.

 ******

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *