ஆசிரியர் பதில்கள் : பார்ப்பனர் எதிர்ப்பு- நம் பாதை சரியென்பதற்குச் சான்று!

பிப்ரவரி 01-15 2020

கே.       நடிகர்களை நம்பியே அரசியல் நடத்த நினைக்கும் சில அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

– நெய்வேலி க.தியாகராசன்,

 கொரநாட்டுக் கருப்பூர்

ப:           மண் குதிரையை நம்பி ஆற்றைக் கடக்க நினைக்கும் அதிபுத்திசாலிகள் அவர்கள்!

கே.       ரஜினி மீது திராவிடர் கழகம் வழக்குத் தொடுக்குமா?

– ரஜினி, சிங்கிபுரம்

ப.           பொறுத்திருந்து பாருங்கள்!

மாஃபா

 பாண்டியராஜன்

கே.       தமிழும் சமஸ்கிருதமும் கோயிலில் அர்ச்சனை மொழியாக இருக்க வேண்டும் என்று மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளது சரியா?

– பெ.கூத்தன், சிங்கிபுரம்

ப:           ஏற்கெனவே அப்படி ஓர் அரசு ஆணை “தமிழிலும்’’ என்று போடப்பட்டு, நாம் கண்டித்த பிறகு, சுற்றறிக்கை உள்ளது. தமிழில்தான் தமிழ்நாட்டில் அர்ச்சனை நடத்தப்பட வேண்டும்.

                இவர் எப்போதும் தனது பதவியைத் தக்க வைக்கவே அருளுரை உபதேசிப்பார். எனவேதான் இந்த வழவழா கொழ கொழா!

கே.       திட்டக்குடி பகுதியில் தங்கள் உள்ளம் பதிந்த தி.க. தொண்டர் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள்?

– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப:           திருவாரூர் சக்ரபாணியார், கிருஷ்ணசாமி, குப்புசாமி, சுந்தரம், புலிவலம் கிருஷ்ணன், வையாபுரி, கருப்பையா இப்படி ஏராளம் உண்டு. எல்லோருமே எமது உள்ளத்தில் பதிந்தவர்கள்தாம்!

கே.       தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், புலனாய்வுத் துறைகள், வருமானவரித்துறை, ராணுவம் போன்ற அனைத்துத் துறைகளும் காவிகளுக்கு சேவகம் என்கிற நிலையில் தீர்வு பெறுவது எங்கே?

– உ.வெற்றி, உடையார்பாளையம்

ப:           மத்தியில் ஆட்சி மாற்றம், பிறகு காட்சி மாற்றம் ஏற்படும்போது!

கே.       பெரியார் நடத்திய போராட்டங்களை விளக்கும் நூல் நம் நிறுவன வெளியீட்டில் உள்ளதா?

– அருண்குமார், விக்கிரமங்கலம்

ப:           பல நூல்கள் உள்ளன. விரிவான வரலாறு அவற்றை ஒட்டுமொத்தமாகவும் விளக்கும். வைக்கம் போராட்டம் போல தனித்தனியாகவும் உண்டு!

நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

கே.       ‘நீட்’ தேர்வை நீக்க வேண்டி தாங்கள் மேற்கொண்டுள்ள நெடும் பயணத்தை பார்ப்பன ஏடுகள் பரிகாசம் செய்வது பற்றி தங்கள் கருத்து என்ன?

– மகிழ், சைதை

ப:           பார்ப்பன ஏடுகளின் எதிர்ப்பு என்பது, நம் பாதையும் பயணமும் சரியானது என்பதற்கான சான்று ஆயிற்றே!

கே.       ஆரியப் பார்ப்பனர் அனைவரும் ஒரே அணிவகுப்பில் ஒத்த குரலில் பேசுகையில், பார்ப்பனர் அல்லாதார் முரண்பட்டு மோதும் நிலையை மாற்ற வழி என்ன?

– பாலா, வேலூர்

ப:           வெகு சிறுபான்மையினர் ‘அவாள்’. அதனால் Homogeneous – ஒரே மாதிரி. பார்ப்பனரல்லாதார், பல பிளவுபட்ட பெரும்பான்மையினர் _ அதாவது Hetrogeneous – வேற்றுமை நிலவும் நிலை.

                திராவிட பண்பாட்டு உணர்வு மேலோங்கும் நிலையில் ஒன்று சேருவார்கள். பல தேர்தல் முடிவுகள்கூட அதனைக் காட்டியுள்ளதே!

கே.       ராமனைத் தூக்கிப் பிடிப்பதைப் பார்த்தால் ரஜினிகாந்த் ராமராஜ்யம் நடத்தத்தான் துடிக்கிறாரா?

– கிருஷ்ணன், ஈரோடு

ராஜாஜி

ப.           கனவுலகில் நடத்தலாம் ராமராஜ்யம். புதிய படமும் எடுக்கலாம்! ராமனைத் தூக்கிப் பிடித்த ராஜாஜியே தோற்றார் _ தமிழ்நாட்டில் _ என்பதுதான் வரலாறு. வரலாறு மீண்டும் திரும்பும். உறுதி!

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *