கவிதை நல்லது!

ஜனவரி 16-31 2020

வாசிப்புப் பழக்கத்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து யேல் பல்கலைக்கழகம் 2016ஆம் ஆண்டு ஆய்வொன்றை மேற்கொண்டது. ஏறத்தாழ 3,600 பேருக்கு மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு அவர்களின் ஆயுள்காலம் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. `பாடப் புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்களைவிட கதைப் புத்தகங்கள், கவிதைகள் சார்ந்த வாசிப்புகள்தான் மூளை வளர்ச்சிக்கு நல்லது எனக் குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். பல கதாபாத்திரங்களைக் கொண்ட புனைவுகளை வாசிப்பவர்கள் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள் என்றும் அந்த ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது!

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *