(முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள் துஞ்சல்’’ சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம் – நா.முத்துநிலவன்)
மதுரையை வாழ்விடமாகக் கொண்ட முனைவர் வா.நேரு எழுதிய 13 சிறுகதைகள் “நெருப்பினுள்
துஞ்சல்’’ எனும் தொகுப்பாக வந்திருக்கிறது.
வாழ்வியலின் இயல்பான பல நிகழ்ச்சிகளைத் தனது பார்வையில் நல்ல சிறுகதைகளாக்குவதில் வெற்றி பெறுகிறார். இவற்றைப் பெரும்பாலும் இணையத்திலும், வலைப்பக்கத்திலும் வெளியிட்டு அவ்வப்போதே வந்த பின்னூட்டங்கள் சிலவற்றையும் நூலில் எடுத்து வெளியிட்டிருப்பது இணைய எழுத்தாளர்கள் கவனிக்க வேண்டிய நல்ல முன்மாதிரி முயற்சி.
பெரியார், அம்பேத்கர், மார்க்சின் தத்துவங்களைத் தனது தனிவாழ்வில் ஏற்று வாழும் இவர், அந்தத் தத்துவங்களை நடைமுறைப்படுத்தும் நல்ல நோக்கிலேயே சிறுகதைகளையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.
நோக்கில் உயர்ந்தவர்கள், சிறந்த கலைத்தன்மையோடு படைப்பைக் கொண்டுவர இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இது இவரது முதல் தொகுப்பே என்பதால், கற்றுக்கொள்வார் என்பதை அய்யமின்றிக் காட்டுவதாகவே தொகுப்பு வந்திருப்பதை முதலில் பாராட்ட வேண்டும்.
இன்றைய தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் ஜாதி, ஆங்கிலக் கல்வி மோகம், சுயநல அரசியல், கார்ப்பரேட்டுகளின் கல்வி – மருத்துவ வணிகச் சேவை, இளையோரைச் சரியாக நடத்தும் வழியறியாமல் பாசத்தைக் கொட்டியும் வருந்திக் கிடக்கும் பெற்றோர், இளையோர்களின் நோக்கற்ற போக்கு, சங்கத் தலைவர்களுக்கு இன்று அதிகம் தேவைப்படும் பன்முக ஆற்றல், உழைப்பாளிகளின் வேர்வை ஈரம் சொட்டும் அன்பின் ஆழம், நல்லோர் வாழ்வை வழிமறித்து நந்தியாய்க் கிடக்கும் மூடநம்பிக்கைகள், சென்னை போலும் வெள்ளத்தை மீறி நின்ற அன்புப் பெருவெள்ளம், தனிமனிதர்களின் சின்னஞ்சிறு ஆசைகளைத் தூண்டி, அதன்மூலம் அவர்களின் வாழ்க்கையை மட்டுமின்றித் தலைமுறைகளை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட்டுகளின் ஆசையைத் தூண்டும் சதி, அதை வெற்றிகொள்ள வேண்டிய கடும் தவமுயற்சி, இன்றைய கல்விமுறையில் தேவைப்படும் மாற்றங்கள் என இவர் படைத்திருக்கும் கதைகளின் மய்யக் கரு அனைத்தும் நம்மை ஈர்த்து அணைத்துக் கொள்வதில் வியப்பில்லை. எடுத்துக்கொண்ட கதைக் கருக்களுக்காகவே ஆசிரியரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்!
நூல் மதிப்புரை
(முனைவர் வா.நேரு எழுதிய “நெருப்பினுள்
துஞ்சல்’’ சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் விமர்சனம் – நா.முத்துநிலவன்)

Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}