Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வலைவீச்சு : முகநூல் பேசுகிறது

 

தமிழனின் அடையாளமான வள்ளுவரின் படம் மறைப்பு, தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்ததன் வெற்றிவிழாவாக நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டு இலட்சினை மறைப்பு, கல்வி நிலையங்களுக்கு புத்தகங்கள் தர மறுப்பு, தற்பொழுது இந்தியாவிலேயே அதிநவீன வசதி கொண்ட தமிழறிஞர் அண்ணாவின் பெயர்தாங்கிய நூலகம் அழிப்பு………. அட…. அட…அட… தமிழர்களுக்கு எதிராக சிங்களவன் என்னென்ன செய்தானோ அதையெல்லாம் செய்தாயிற்று!!! என்னை ஆட்சியில் அமர வைத்த தமிழக மக்களுக்கு மிக்க மிக்க நன்றி….

சுகுமாரன், நவம்பர் 2, 2011, மாலை 6.14

புத்த விகார்களை அழித்து இந்து கோவில்களாகவும், தங்களை எதிர்த்த புத்த,சமணர்களை கழுவில் ஏற்றியும், திராவிடர் களின் அடையாள சின்னமான காளையை குதிரையாகவும் மாற்றியவர்கள் ஆரியர்கள் என்பதை நம்பாதவர்கள் ஜெய லலிதாவின் நடவடிக்கையை வைத்தாவது நம்பியாக வேண்டும்.

ஆரியர் பகைவர் அசுரர் திராவிடர் நவம்பர் 2, 2011, இரவு 10.38 மணி

 

நேற்றிரவு முழுக்க தூக்கமிழந்து அமைதியற்றுத் தவித்தேன்.

ஒரு அந்தரங்க இழப்பு போலிருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு அரசு தனது எல்லா தார்மீக நெறிகளையும் இழக்கும்போது அது சிந்தனையாளர்களை ஒடுக்கும். நூலகங்களை அழிக்கும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அழிப்பது ஒரு இருண்ட காலத்தின் அடையாளம். நாம் அறிவுணர்ச்சியற்ற ஒரு சமூகம் என்பதை மீண்டும் ஒரு முறை நீரூபிக்கப் போகிறோமா?

மனுஷ்யபுத்ரன், நவம்பர் 3, 2011, காலை 9.40 மணி

மாப்ள… கலைஞருக்கு ஸ்டேடி யத்தை நூலகமாவும்… நூலகத்தை ஆஸ்பத்திரியாகவும், ஆஸ்பத்திரியை ஸ்டேடியமாகவும் மாற்றும் கலை தெரியாதுடா  – நேற்று ஒரு சிட்டிசன் சொன்னது!

ஓசை செல்லா
நவம்பர் 8, 2011, மாலை 3.37 மணி