Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முற்றம் : நூல் அறிமுகம்

நூலின் பெயர்: ஃ ஆயுத எழுத்து

ஆசிரியர்: ஞா.சிவகாமி

பதிப்பகம்: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை_40. செல்: 98403 58301

நூலாசிரியர் ஞா.சிவகாமி அவர்களின் ஒன்பதாவது நூலாகும். இதில் அவருடைய அனுபவம், பார்த்த மனிதர்கள், கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு உண்மையும் கற்பனையும் கலந்து சிறுகதையைப் படைத்துள்ளார். இதில் உள்ள 21 கதைகளில் சம காலத்தின் ஒரு சில அரசியல் நிகழ்வுகளையும் அக்கறையோடு தொட்டுச் செல்கிறார். ஒவ்வொரு சிறு கதைக்கும் முடிவில் பாரதி கவிதைகளின் மேற்கோள்களை எழுதி இருப்பதால் வாசிப்பவருக்கு சிறுகதையின் தன்மையை விட்டு கட்டுரையின் வடிவமாகவும் பார்க்க இடம் அளிக்கிறது. இந்நூல் ஆசிரியருடைய சமூக அக்கறை நிறைய கதைகளில் வெளிப்பட்டு, பின் தொடர்ந்து வாசிப்பு, எழுத்து என தன் வாழ்க்கையை மாற்றியமைக்கு ஞா.சிவகாமியின் வாசிப்பு முக்கிய காரணமாகும். அவரிடமிருந்து நாம் இன்னும் மேலான பல படைப்புகளை எதிர்பார்க்கலாம்.

– மலர்