நூலகப் பேருந்து
மெக்சிகோ மற்றும் ஆப்கானிஸ்தானில் குழந்தைகளுக்காக நடமாடும் நூலகப் பேருந்து திட்டம் உள்ளது. குழந்தைகளுக்கான விதவிதமான கதை மற்றும் பொது அறிவுப் புத்தகங்கள் உள்ளன. கிராமப்புறக் குழந்தைகளின் வாசிப்புப் பழக்கம் மற்றும் கல்வி அறிவை மேம்படுத்துவது இந்த நூலகப் பேருந்துகளின் நோக்கம். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளுக்குள் இந்தப் பேருந்துகள் வந்தாலே குழந்தைகள் உற்சாகமாகி விடுகிறார்கள். இதிலுள்ள புத்தகங்களை ஆவலுடன் படிக்கிறார்கள்.
******
இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 4 பாலியல் குற்றங்கள் நடப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.
ஒரு நெகிழிப் புட்டிக்குள் (Plastic Bottle) மட்டும் 526 ‘ஹெர்மிட்’ நண்டுகள் விழுந்து இறக்கின்றன.
******
1950ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உருவானது முதல் தற்போது வரை நியமிக்கப்பட்ட 229 நீதிபதிகளில் வெறும் 6 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள்.
கார்பன் பேப்பரை அறிமுகப்படுத்தியவர் ரால்ப் வெட்ஜ்வுட் என்பவர். அறிமுகப்படுத்திய ஆண்டு 1806இல்.
******
இந்தியாவில் காகித ரூபாய் 1882ஆம் ஆண்டில் அறிமுகமானது.
காது கேளாதோருக்கான கல்வி முறையை முதன்முதலில் ஸ்பெயின் நாடு அறிமுகப்படுத்தியது.
உலக அளவில் ஒவ்வொரு வருடமும் ரத்த அழுத்தம் காரணமாக சுமார் 9 மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர்.
பதக்கம், விருது வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியது எகிப்து மன்னர்கள்.
******
ஈரமில்லாத நீர்!
ஈரம் இல்லாவிட்டால் அதை எப்படி நீர் என்பது என்கிற கேள்வி எழுகிறதல்லவா? பவுடர் போன்று காணப்படும் இதைத் தூளாக்கப்பட்ட திரவம் என்பார்கள். ஒரு வகை சிலிகாதான் இது. இந்தக் காய்ந்த நீரிலும் 95 சதவிகித திரவமே இருக்கும். இந்த சிலிகா கோட்டிங், நீர்த்துளிகள் உடைந்து திரவமாக மாறுவதைத் தடுக்கிறது. இப்படித் தடுக்கப்படுவதால் உப்புத்தூள் போன்று மாறிவிடும். இதையே காய்ந்த நீர் என்கிறார்கள்.
******
வவ்வால்குச்சி
இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒருவகை நடைப் பயணக் குச்சியை, பார்வையற்றவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்காக உருவாக்கினார்கள். இது வவ்வால்களின் இயக்கத்தின் அடிப்படையில் செயல்படுவதாக அமைந்திருந்தது. வவ்வால்கள், தான் பயணிக்கும் பாதையில் எதிரே உள்ள பொருள்களை அறிந்து கொள்வதற்காக எதிரொலி முறையைப் பயன்படுத்தும். ஒலி எதிரே உள்ள பொருள்களில் பட்டும் எதிரொலிக்கும் வேகத்திற்கேற்ப பொருளின் நெருக்கம், உயரம், தடை ஆகியவற்றைக் கணித்துக்கொண்டு அவற்றால் எளிதில் விலகிச் செல்ல முடியும். எனவே, இந்த நடைக்குச்சிகள் வவ்வால் குச்சி (பேட் கேன்) என்று அழைக்கப்பட்டன. இதை, பார்வையற்றவர்களின் பாதையில் குறுக்கிடும் தடைகள், அருகில் உள்ள பொருள்களை அறிந்து ஒலியெழுப்பும். ஒலியைக் கேட்க முடியாதவர்கள் அதிர்வுகள் மூலம் அறிந்து கொள்ளவும் இந்தச் குச்சியில் அதிர்வு உணர்வு கருவி பொருத்தப்பட்டுள்ளது.