ஆசிரியர் பதில்கள் : ஆடாதீர் அக்ரகாரத்தவரே!

டிசம்பர் 16-31 2019

கே:       ‘கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஆபாசமாக இருக்கின்றன’ என்று பேசியதற்காக திருமாவளவனை பார்க்கும் இடத்திலெல்லாம் அடியுங்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியிருப்பது பற்றி?

                -நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

 திருமாவளவன்

ப:           மாறுபட்ட கருத்தை _ அதுவும் ஆதாரங்கள் உள்ள ஒரு கருத்தைக் கூறியதற்காக அக்கிரகார அம்மாமிகள் இப்படித் துடிக்கலாமா? வன்முறையைத் தூண்டும் வழக்கு இவர் மீது பாய வேண்டாமா?

                காலம் இப்படியே போகாது. நீதிக்கு வணங்க வேண்டிய பருவம் விரைவில் வரும். ஆடாதீர்! -_ அக்கிரகாரத்தவரே.

கே:       பூட்டை உடைத்தவர், ஆட்டைத் திருடியவர், சிலையை எடுத்தவர், சிலையை உடைத்தவர் இவர்களுக்கெல்லாம் இ.பி.கோவின்படி தண்டனை கொடுக்கும் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம்  _ பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு துணை போனவர்களுக்கு இ.பி.கோவின்படி தண்டனை கொடுப்பது இல்லையா? இவர்களெல்லாம் மேல்ஜாதிக்காரர்கள் என்பதாலோ! இதுபற்றி…?

                – பெ.கூத்தன், சிங்கிபுரம்

பாபர் மசூதி

ப:           இடித்த வழக்கு நடக்கிறது; பொன்விழாவை நோக்கி வேகமாக நகருகிறது, போதாதா?

கே:       நடமாடும் பல்கலைக்கழகம், சுயமரியாதை இயக்க தளகர்த்தர், முன்னாள் அமைச்சர் மறைந்த இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, அவர் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழக விழாவில், தனது இறுதிப் பேருரை போன்று அமைந்த அவரது உரை, குறுந்தகட்டில் வெளியிடப்படுமா?

                – மன்னை சித்து, மன்னார்குடி-1

இரா.நெடுஞ்செழியன்

ப:           நிச்சயம் வெளியிடுவோம் சித்து!

கே:       உடல் உழைப்பின்றிச் சிந்திக்கும் கூட்டம் உயர்ந்த வாழ்க்கை வாழவும், மாடுபோல் பாடுபடும் மக்கள் வறுமையில் வாடவும் காரணமாய் எதைக் கூறுவீர்கள்?

                – கல.சங்கத்தமிழன், செங்கை

ப:           ஜாதி தர்மம் _ ஜாதி முறை நீடிப்பு _ பார்ப்பனியம் மூலகாரணம்.

கே:       எல்லோரும் ஒரே தேசம், ஒரே ரேசன் கார்டு, என்று கொக்கரிக்கும் காவிகள், “எல்லோரும் இந்தியர்கள்’’ என்று மதிக்காதது ஏன்?

                – தமிழ்நேசன், மாதவரம்

சரத்பவார்

ப:           ‘எல்லோரும் இந்தியர்கள்’ என்றால் பிடிக்காது. ‘எல்லோரும் ஹிந்துக்கள்’ என்றால்தான் பிடிக்கும் அவாளுக்கு!

கே: மகாராஷ்டிராவில் சரத்பவாரின் வியூகத்தை மற்ற மாநிலத் தலைவர்கள் பின்பற்றலாம் அல்லவா?

– மகிழ், சைதை

ப:           நிச்சயமாக _ அடுத்து அரசியல் அத்திசை நோக்கியே நகரக் கூடும்!

கே: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி வகுப்பு எடுப்பது, அண்ணாவின் மொழிக் கொள்கையை நீர்த்துப் போக வைக்கும் செயல் அல்லவா?

                – சசிக்குமார், வாணியம்பாடி

ப:           அதைச் சுட்டிக்காட்டி, திரும்பப் பெற வைத்து விட்டோம் _ கவலைப்படாதீர்!

கே: ‘உண்மை‘ இதழின் பொன்விழா வருகிறதே! சிறப்புப் பதிவுகள் எதிர்பார்க்கலாமா?

– குணசேகரன், பெருங்களத்தூர்

ப:           நிச்சயமாக! _ வாசகர்களை ஏமாற்றக் கூடாதல்லவா?

பிரியங்கா ரெட்டி

கே: ஒரு மருத்துவரையே வன்புணர்வு செய்து கொல்லும் நிலைக்கு நாட்டின் நிலை மோசமாகி வருகிறதே! தீர்வுதான் என்ன?

                – புவியரசன், ஈரோடு

கே: தீர்வு _ என்கவுண்ட்டரில் முடிந்தது என்றாலும், நோயின் மூலத்தை அகற்ற உரிய நடவடிக்கையே சரியான தீர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *