பெட்ரோல் ஸ்டேஷனில் டூவீலர் மற்றும் கார்களின் டியூப்களில் காற்றடித்துக் கொள்வது என்பது காலம்காலமாக நடந்து வருவதுதான். இப்போதெல்லாம் சில பெட்ரோல் ஸ்டேஷன்களில் நைட்ரஜன் காற்றை நம் வண்டியின் டியூப்களில் செலுத்திக் கொள்ள வசதி வந்திருக்கிறது.
காற்று என்பதிலேயே 78 சதவிகிதம் நைட்ரஜனும், 21 சதவிகிதம் ஆக்ஸிஜனும் உள்ளன. அப்படியானால் 78 சதவிகித நைட்ரஜனை நாம் காலம்காலமாக வண்டியின் டியூப்களுக்கு ஏற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த 78 சதவிகிதம் என்பது 100 சதவிகிதம் என்று ஆவதால் என்ன நன்மை? அதாவது காற்றுக்குப் பதிலாக நைட்ரஜன் மட்டுமே டியூப்பில் ஏற்றப்பட்டால் டூவிலர்களுக்கும், கார்களுக்கும் நன்மைகள் அதிகம்.
நைட்ரஜன் என்பது ரப்பர் வழியாக எளிதில் வெளியேறிவிடாது. அதாவது நீண்டகாலத்துக்கு உங்கள் டயரில் உள்ள காற்றழுத்தம் ஒரே மாதிரி இருக்கும். நைட்ரஜன், காற்றைவிட பெரிய அளவு அணுத்துகள்களைக் (விஷீறீமீநீuறீமீ) கொண்டது. அது டயரிலிருந்து மிக மிக மெதுவாகத்தான் வெளியேறும்.
டயருக்குள் ஈரப்பதம் இருப்பது நல்லதல்ல. ஆக்சிஜன் வாயுவையும் அவசரத்திற்கு மாற்றிப் பயன்படுத்தினாலும் டியூப்புக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.
நைட்ரஜன் வாயுவை டியூப்களில் செலுத்தினால் அடிக்கடி அதை மீண்டும் நிரப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. சீரான காற்றழுத்தம் காரணமாக எரிபொருள்கூட ஓரளவு மீதமாகும்.
காற்றிலுள்ள ஆக்ஸிஜன், டயரில் ஈரப்பதத்தைத் தொடர வைக்கக்கூடும். ஆனால், நைட்ரஜன் ஓர் உலர்ந்த வினைபுரியாத வாயு. எனவே, ஈரப்பதத்தை இது தக்கவைத்துக் கொள்வதில்லை.