மூடநம்பிக்கையைப் பரப்பும் மீடியாக்கள்
பத்திரிகை கவுன்சில் வரம்பிற்குள் எலக்ட்ரானிக் மீடியாக்களையும் கொண்டு வர வேண்டும். மீடியாக்கள் மீது எனக்கு அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லை. மீடியாக்கள் எல்லாம் மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்.
ஆனால், மக்களின் நலனுக்காக அவர்கள் செயல்படுவதில்லை. அதற்கு மாறாக சில நேரங்களில் மக்களுக்கு விரோதமாகச் செயல்படுகின்றனர்.
குறிப்பாக, இந்திய மீடியாக்கள் அடிக்கடி இதுபோன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றன. உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் செயல்களைச் செய்கின்றன.
நாட்டில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் வேலைகளை மீடியாக்கள் செய்கின்றன. இது ஒட்டு மொத்த தேச நலனுக்கும் விரோதமானது. நவீன அறிவியல் விஷயங்களை, மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், அதற்கு மாறான மக்களின் மூடநம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் வேலைகளை மீடியாக்கள் செய்கின்றன.
– மார்க்கண்டேய கட்ஜு மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, பத்திரிகை கவுன்சில் தலைவர்