பெரிய துறைமுகம்
உலகில் அதிக சரக்குகளைக் கையாள்வதன் அடிப்படையில் உலகின் பெரிய துறைமுகமாக சீனாவின் ‘ஷாங்காய்’ துறைமுகம் விளங்குகிறது. இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது. இது 2010ஆம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிசியான துறைமுகம் எனப் பெயர் பெற்றது.
இந்தத் துறைமுகம் 2016ஆம் ஆண்டு 370 கோடி ‘டிஇயூ’க்களைக் கையாண்டது. ‘டிஇயூ’ என்றால் ‘டுவென்ட்டி பூட் ஈக்வலன்ட் யூனிட்’ ஒரு கப்பலில் சரக்கு சுமக்கும் திறனை அளவிடப் பயன்படுகிறது.
இது ஆறு, கடல் சேர்ந்த துறைமுகமாக விளங்குகிறது.
******
காந்தி அமைதிப் பரிசுதான் இந்தியாவில் அளிக்கப்படும் மிகப் பெரிய தொகை கொண்ட பரிசாகும். பரிசுத்தொகை ஒரு கோடி ரூபாய்.
பொலிவியா நாட்டில் பூபாரெய் மண்டி என்கிற ஒரு வகை தாவரம் உள்ளது. இது 80 முதல் 150 ஆண்டுகளுக்கு பின்பு பூப்பூக்கத் தொடங்குமாம்!
******
உலகின் முதல் பெண் விமானி இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யேல் பிங்கல் ஸ்டீபன் என்பவர் ஆவார்.
இந்திய அரசியலமைப்பு முதல் கூட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் டாக்டர் சச்சிதானந்தா சின்ஹா.
மொராக்கோ நாட்டில் உள்ள கோஸ்லியா என்னும் வகை ஆடுகள் மரத்தில் ஏறி இலைகளைப் பறித்து உண்ணும்.
******
தேனீ!
“தேனீக்கள் அழிந்துவிட்டால், மனித இனம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழாது…’’ என்ற ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனின் கூற்றை இப்போது பலரும் பரிசீலித்து வருகின்றனர். உலகளவில் நடக்கும் விவசாயத்தில் 70 சதவிகிதம் தேனீக்களைச் சார்ந்தே இருக்கிறது. தேனீக்களால் நிகழும் மகரந்தச் சேர்க்கையால் தாவரங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. தவிர, தேன் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல வழிகளில் மனிதனுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இப்படி நிறைய காரணங்களை அடுக்கி உலகின் முக்கிய உயிரினமாக தேனீயை முன்மொழிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
******
உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1913.
ஆப்பிரிக்காவில் உள்ள சிட்ருங்கா என்னும் மான் இனம் தண்ணீரில் மிதந்தபடி உறங்கும்.
நாய்களுக்கு என உணவு விடுதி உள்ள நகரங்கள் டோக்கியோ மற்றும் நியூயார்க்.
முயலின் வியர்வைச் சுரப்பிகள் அதன் காலடிகளில் உள்ளன.
******
அதிகரிக்கும் கேன்சர் பாதிப்பு
உலகில் அதிக உயிரிழப்பை கேன்சர் ஏற்படுத்துகிறது. பணக்கார நாடுகளில் அதிக அளவில் உயிரிழப்பை கேன்சர் நோய்தான் ஏற்படுத்துகிறது. இங்கு இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பை விட கேன்சரால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம். மேலும் உலக அளவில் இருதய நோயால் 2017இல் 1.77 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். இது உலகின் மொத்த உயிரிழப்பில் 40%. கேன்சரால் உயிரிழந்தவர்களின் சதவிகிதம் 26. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில் இருதய நோயின் இறப்பு விகிதத்தைவிட கேன்சர் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது.
******