பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு 16.9.2019 அன்று விருதுநகரில் காலை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது.
கலைநிகழ்ச்சி
மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளாக பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி நடைபெற்றன.
தாமிரபரணி கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சியை பல்சுவை நிகழ்ச்சியாக வழங்கினர்.
பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில செயலாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் கலைநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
மாநாட்டுத் திறப்பு
மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர், மாநாட்டு வரவேற்புக்குழு செயலாளர் கா.நல்லதம்பி வரவேற்றார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் இரா.தமிழ்செல்வன் இணைப்புரை வழங்கினார்.
புயல் சுகுமார், ந.காமராசு, ச.அழகிரி, தங்க.வீரமணி, ஆடிட்டர் சண்முகம், வி.மோகன், கு.பெரியார், கருணா, முழுமதி, சீ.தங்கதுரை, உ.சிவதாணு, கு.ரஞ்சித்குமார், நெ.நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டின் தலைவரை முன்மொழிந்து மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் கோபு.பழனிவேல் உரையாற்றினார்.
அ.மன்னர்மன்னன், குடந்தை மோகன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், புதுவை நடராசன், இர.கிருட்டினமூர்த்தி, புலவர் இரா.சாமிநாதன் மற்றும் ந.ஆனந்தம், ஜி.எஸ்.எஸ். நல்லசிவம், கவிஞர் அறிவுடைநம்பி, கோவி.கோபால், பெ. ரமேஷ், இரா.வாசுதேவன், தங்க.சிவமூர்த்தி, இரா.சிவக்குமார்ஆகியோர் வழிமொழிந்தார்கள்.
பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் மா.அழகிரிசாமி தலைமையேற்று உரை யாற்றினார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
படத்திறப்பு
மாநாட்டின் துவக்கத்தில் அம்பேத்கர், காமராஜர் படங்களை பார்வையிடும் ஆசிரியர் மற்றும் மாநாட்டுக் குழுவினர்
பன்னாட்டளவில் பகுத்தறிவு நெறி பரப்பிய அறிஞர் பெருமக்கள், பகுத்தறிவுப் போராளிகள் படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு உரையாற்றினார்.
தந்தைபெரியார் படத்தைத் திறந்து வைத்து பேராசிரியர் க.அருணன் உரையாற்றினார்.
மாநாட்டில் சிறப்புரையாற்றும் ஆசிரியர்
அறிவியல் கண்காட்சி திறப்பு
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அறிவியல் கண்காட்சியைத் திறந்துவைத்து உரையாற்றினார்.
மாநாட்டு அரங்கில் தமிழர் தலைவர்
மாநாட்டின் அரங்கில் குடும்பம் குடும்பமாக இருந்த கழகத் தோழர்களுக்கு புன்னகையுடன் வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சி பொங்க உற்சாகத்துடன் அனைவரிடமும் கைகுலுக்கி நலன் விசாரித்தபடி திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்தார்கள்.
தந்தை பெரியார் வாழ்க, தந்தை பெரியாரை உலகமயமாக்கும் தலைவர் வீரமணி வாழ்க, உலகப் பகுத்தறிவாளர்களின் தலைவர் வீரமணி வாழ்க, அமெரிக்காவில் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தலைவர் வீரமணி வாழ்க, தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு வீரமணி வாழ்க, உலக நாத்திகர்களின் ஒப்பற்ற தலைவர் வீரமணி வாழ்க உள்ளிட்ட கழகத் தோழர்களின் வரவேற்பு முழக்கங்கள் வானைப்பிளந்தன.
கருத்தரங்கம்
‘புதியதோர் உலகு செய்வோம்’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டின் சிறப்பு கருத்தரங்க அமர்வில் உரையாற்றும் மஞ்சை வசந்தன்
பா.இரா.இராமதுரை, கோவி.அன்புமதி, ஆர்.பெரியார்செல்வன், கே.எம்.கருப் பண்ணசாமி, வீ.சுப்ரமணி, ச.தருமராஜ், பெ.நடராசன், ச.பால்ராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ப.திருமாவேலன்
ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கருத்தரங்கத் தொடக்க உரையாற்றினார்.
“பெரியாரை உலக மயமாக்குவோம்’’ எனும் தலைப்பில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணித் தலைவர் பேராசிரியர் ப.காளிமுத்து, ‘ஜாதி ஒழிப்பு’ எனும் தலைப்பில், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், “முறியடிப்போம் மூடநம்பிக்கைகளை’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, ‘மதவெறி மாய்ப்போம்’ எனும் தலைப்பில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன், “பெண் விடுதலை நோக்கி, பாலியல் சமத்துவம்’’ எனும் தலைப்பில் திராவிடர் கழக மாநில மகளிரணி அமைப்பாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி ஆகியோர் உரையாற்றினார்கள்.
மாநாட்டில் அறிஞர் பெருமக்கள்
இந்திய பகுத்தறிவாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் முனைவர் நரேந்திரநாயக், 2019ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றவரும், பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி கிளை பொறுப்பாளரும், ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமாகிய உல்ரிக் நிக்லஸ், கேரள மாநில பகுத்தறிவாளர், திருவனந்தபுரம் சுகுமாறன் தனுவச்சாபுரம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நாடுமுழுவதுமிருந்து மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்துள்ளார்கள்.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் உல்ரிக் நிக்லஸ் மற்றும் சுகுமாறன் தனுவச்சாபுரம் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் ஆசிரியர்.
தீர்மானங்கள்:
‘நீட்’, ‘டெட்’ போன்ற தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும், ஜாதி வாரி சுடுகாடு கூடாது என்பது உள்பட 21 தீர்மானங்கள் விருதுநகரில் நடைபெற்ற (16.11.2019) பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நீட் தேர்வு உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பட்டிமன்றம்:
பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடித் தேவை… ஆண்களிடமா? பெண்களிடமா? எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.த.சண்முகசுந்தரம் வரவேற்றார்.
பகுத்தறிவாளர் கழகப் பொருளாளர் சி.தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.
பட்டிமன்றத்தின் நடுவராக ஊடகவியலாளர் கோவி.லெனின் சிறப்பாக பட்டிமன்ற நிகழ்வினை நெறிப்படுத்தி நடத்தினார்.
“பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடித் தேவையாகத் தொடங்க வேண்டியது ஆண்களிடமே!’’ எனும் அணியில் வழக்குரைஞர் பா.மணியம்மை, இறைவி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தே.அ.ஓவியா ஆகியோர் வாதங்களை முன்வைத்து உரையாற்றினர்.
“பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடித் தேவையாகத் தொடங்க வேண்டியது பெண்களிடமே!’’ எனும் அணியில் முனைவர் அதிரடி க.அன்பழகன், தஞ்சை இரா.பெரியார் செல்வன், கோபி வெ.குமாரராசா, தேவகோட்டை அரவரசன் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து உரையாற்றினார்கள்.
இரு அணியினரின் வாதத்திறமையால் தந்தை பெரியார் கூற்றுகள் எடுத்துக் கூறப்பட்டு, பார்வையாளர்கள் பெரிதும் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி இரு அணியினரையும் ஊக்கப்படுத்தினர்.
பட்டிமன்றத்தின் நடுவராக இருந்த ஊடகவியலாளர் கோவி.லெனின் தமது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:
பகுத்தறிவுப் பிரச்சாரம் உடனடித் தேவையாகத் தொடங்க வேண்டியது ஆண்களுக்கே _- பரவ வேண்டியது பெண்களுக்கே, இருபாலரும் மூட நம்பிக்கைகளை முறியடித்து பகுத்தறிவுப் பாதையில் பயணமாவதே சாலச் சிறந்தது என்று தீர்ப்பில் கூறினார்.
இந்திய பகுத்தறிவாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு செயல் விளக்க நிகழ்ச்சி மாநாட்டில் அனைவரையும் கவர்ந்தது.
புட்டபர்த்தி சாயிபாபா, ரவிசங்கர் உள்ளிட்ட சாமியார்களின் மோசடியைத் தோலுரித்து சென்னை, கான்பூர் அய்.அய்.டி. உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் நாடு முழுவதும் பகுத்தறிவு அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை செய்து வருபவர் பேராசிரியர் நரேந்திர நாயக். அவருடைய மந்திரமா? தந்திரமா? விளக்க நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கண்டு பயன்பெற்றனர்.
மாலையில் திறந்த வெளி அரங்கில் மாநாடு
பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு ‘சுயமரியாதைச் சுடரொளி’ பேராசிரியர் பு.இராசதுரை நினைவரங்கத்தில் பகுத்தறிவாளர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதி வரவேற்புரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாட்டின் திறந்தவெளி அரங்கக் கூட்டத்தின் தலைவரை பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் துறையூர் சா.மணிவண்ணன் முன்மொழிந்து உரையாற்றினார்.
எம்.ஆர்.மாணிக்கம், கி.எழில், க.செந்தில்குமார், சி.தமிழ்செல்வன், பெ.எழிலரசன், பி.என்.எம்.பெரிய சாமி, க.வேலுமணி, ஞானவள்ளுவன், அசோக்குமார், ஆர்.முத்துக்கிருட்டினன் ஆகியோர் வழிமொழிந்தார்கள்.
பேரா.க.திருமாறன், வே.செல்வம், தே.எடிசன் ராஜா, விடுதலை தி.ஆதவன், சீ.டேவிட் செல்லதுரை, வானவில் வ.மணி, ந.விஜய் ஆனந்த், க.அருள்மொழி, சி.சுப்ரமணியன், வே.ரகுநாதன், இரா.தமிழன்பன், வ.முருகானந்தம், பி.இளங்கோவன், மு.க.ஜீவா, பாலெ.மதிவாணன், நெல்லை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்கத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை திண்டுக்கல் ஈட்டி கணேசன் சிறப்பாக நடத்திக் காட்டினார்.
ப.க. பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், உளவியல் மருத்துவர் ஷாலினி, கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழகப் பொதுச் செயலாளர் இரா.செயக்குமார், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, விடுதலைச் சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிறைவாக பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.விருதுநகர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சு.பாண்டி நன்றியுரையாற்றினார்.
காவல்துறையின் வழி காவிக்கூட்டம் தந்த தடைகள் பலவற்றையும் தகர்த்து மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது. கூட்டம் சேர்ந்துவிடக் கூடாது என்கிற கெட்ட நோக்கில் நகரின் ஒதுக்குப்புறத்தில் திறந்த வெளி மாநாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், தேடிவந்து பொதுமக்கள் பெருங்கூட்டமாகக் கூடியது எதிரிகளை திகைக்கச் செய்தது. கழகத்தவரை நம்பிக்கை கொள்ளச் செய்தது. இருக்கைகள் நிரம்பி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மணிக்கணக்கில் நின்றபடி நிகழ்வைக் கண்டனர். கருஞ்சட்டைக் கூட்டத்தைவிட பொதுமக்கள் கூட்டம் பன்மடங்கு அதிகம் இருந்தது மக்களின் பேராதரவைக் காட்டியது.