Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கார்ப்பொரேட்களுக்கு எதிராக அமெரிக்கர்கள்

பொருளாதாரச் சரிவில் இருக்கும் அமெரிக்காவில் கார்பொரேட்களுக்கு எதிரான மக்களின் போராட்டம் தொடங்கி விட்டது. அமெரிக்காவில் வணிகத்தையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கும் முக்கிய இடமான நியூயார்க்கில் உள்ள வால் ஸ்ட்ரீட் பகுதியில் தினந்தோறும் போராட்டங்க்ள் நடந்து வருகின்றன. தொடர்ந்து 3 மாதம் போராட்ட அனுமதி வாங்கியுள்ளதாகச் சொல்லும் போராட்டக்காரர்கள் அங்கேயே தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுவிட்டார்கள்.

‘எங்களுக்குச் சமத்துவம் வேண்டும் அமெரிக்காவில் உள்ள் எல்லா வளங்களையும் பணத்தையும் வசதியையும் ஒரு சதவீத பணக்காரர்களே அனுபவிக்கிறார்கள். 99 சதவீதம் அப்பாவி அமேரிக்க மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள்” என்று கூறும் போராட்டக்காரர்களின் ஒரே முழக்கம் “கார்ப்பரேட் கிரீட் ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பதே. “Occupy Wall Street” (வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம்) என்ற இந்தப் போராட்டம் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தாக்கத்தை  ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.