பாவலர் அறிவுமதி
காதலென்ன குத்தமா?
அதுக்கு
கழுத்தறுக்கும்
சத்தமா?
குறுந்தொகையும்
கலித்
தொகையும்
குவிச்சு
வச்ச தாரடா?
கொலைத்திமிரில்
காதலரைக்
கொல்லுகிறான்
பாரடா!
சாதிவெறி
தல
விரிச்சு
ஆடுதிங்கே
பாரடா!
அட
தடதடன்னு
ஆடுதிங்கே
தமிழினத்தின்
வேரடா!
தேர்தல் ஒண்ணும்
விளங்காது!
இனி
திருப்பிக்
கொடுக்காமல்
அடங்காது!
ஊரும் சேரியும்
ஒண்ணாகத்தா
உடனே
உடனே
விளக்கேத்து!
அட
தொட்டா
தீட்டு
பாத்தா
தீட்டு
சொன்னா
அவன
கழுவேத்து!
அத்தனைத் தமிழரும்
பறைகள்
அடிப்பதை
அமெரிக்காவில்
பார்க்கிறோம்!
அட
இத்தனைப் படிப்பு
இத்தனைப்
பட்டம்
இருந்தும்
ஏன்டா
தோற்கிறோம்!
நாடென ஆண்டு
மாநிலம்
ஆனோம்
பெயரெது
கேட்டால்
தமிழ்
நாடு!
அட
வாழ்ந்தவன்
செத்துப்
பாடையில்
போனால்
எத்தனை
சாதிச்
சுடு
காடு!
எப்படா தமிழா
உருப்
படுவ!
நீ
எதனால்
அடிச்சா
சரிப்
படுவ!
அய்யா பெரியார்
சொல்லிக்
கொடடா!
அம்பேத்கரை
அள்ளிக்
குடிடா!
பொறந்த குழந்தைக்கு
வள்ளுவர்
தான்டா
ஓலை
எழுதிக்
கொடுத்தாரு!
அந்தப்
புகழுக்குரிய
இடத்தைத்
தான்டா
புகுந்தவர்
இடறிக்
கெடுத்தாரு!
பாணன் பறையன்
கடம்பன்
துடியன்
பழந்
தமிழ்ப்
பாட்டில்
படிச்சேன்டா!
அதில்
இவரே
குடிகள்
என்றே
சொன்னவன்
பெயரில்
முத்தம்
பதிச்சேன்டா!
இனத்துக்குள்ளே
இத்தனை
சாதி
எவன்டா
இழுத்து
விட்டது!
அட
இனக்குழு
வாழ்வு
இணையும்
தருணம்
வருணா
சிரமம்
சுட்டது!
நந்தனைச் சுட்டுத்
தருவது
தான்டா
நடனக்
கோயில்
திரு
நீறு!
அவன்
சென்ற
வழியினைச்
சீக்கிரம்
இடித்துச் செந்தமிழாலே
கரை
யேறு!
இதற்கும் மேலே
பிரிஞ்சு
கெடந்தா
எல்லாம்
போயிடும்
தெரிஞ்சுக்க!
அட
தலைக்கும்
மேலே
வெள்ளம்
வரலாம்
காவி
நெறத்துல
புரிஞ்சுக்க!
சாதியில் விழுந்து
கெடக்கும்
வரைக்கும்
தமிழன்
வெல்ல
முடியாது!
சாதிகள் ஒழிச்சு
இனமாய்
விழித்தால்
தமிழனை
வெல்ல
முடியாது!