Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கடவுள் வாழும்(?) கோவிலிலே….

சென்னை பல்லாவரத்தில் உள்ள பெரிய பாளையத்தம்மன் கோவிலில் 7.10.2011 அன்று வெள்ளிக்கிழமை காலை   தந்தை மகள் உறவில் கோவிலுக்கு வந்த இருவரில், மகள் அர்ச்சனைத் தட்டில் 500 ரூபாய் நோட்டைப் போட்டுள் ளார். தந்தை, என் மகள் பெயரில் குடும்பத்தோடு சிறப்பு பூஜை செய்ய வேண்டும். எப்போது வரலாம் என்று கேட்டுக்கொண்டே பூசாரியை கோவில் பிரகாரத்திற்கு அழைத்து வந்துள்ளார். இளம்பெண் பக்தியுடன் சாமி கும்பிடுவது போல் கும்பிட்டு நின்று கொண்டிருந்துள்ளார். பதில் சொல்லிய பூசாரி கருவறையினுள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் போடப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


சென்னை அண்ணா நகர் கிழக்கு ஜி பிளாக்கைச் சேர்ந்த சியாமளா தேவி, வீட்டின் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்த  போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் நகையினைப் பறித்துச் சென்றுள்ளனர்.


சென்னை பூந்தமல்லியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை கோவில் திறந்தவுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


ஆலப்புழை செங்கன்னூர் குமாரமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கோபுரத்தி லிருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய இரிடியத்தாலான கும்ப கலசம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.