கரப்பான்பூச்சியால் தலை இல்லாமல் 9 நாள்கள் உயிருடன் இருக்க முடியும். பிறகு, பட்டினியால்தான் இறக்கும்.
******
மனித இதயம் சராசரியாக தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகத் துடிக்கிறது.
இதயம் தினமும் 2000 கேலன் ரத்தத்தைப் பம்ப் செய்து உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்புகிறது.
உங்கள் உடலின் அத்தனை ரத்தக் குழாய்களையும் ஒன்றுக்கு அடுத்து ஒன்று என்று நீட்டினால் அது மொத்தம் 60000 மைல் தூரத்திற்குப் பரவும்.
******
கடமான் (Cuttle Fish) மீனிற்கு மூன்று இதயங்கள் உள்ளன.
கடலில் வசிக்கும் ஆட்டர் என்னும் கடற்பறவையின் உடல் ஈரமாவதே இல்லை.
ஒரு சாதாரண பென்சிலால் அய்ம்பதாயிரம் ஆங்கில வார்த்தைகளை எழுத முடியும்.
******
ஜப்பானிய மொழியில் ஓய்வு என்னும் சொல் இல்லை.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பே இல்லாத நாடுகள் ஓமன், லாவோஸ், ஈகுவடார்.
முதன்முதலாக1922ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் நாள் இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.
******
கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் ஓட்டிய இரண்டு கப்பல்களின் பெயர்: லாவோ, காலிபா.
வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
பூமத்தியரேகைக்கு நேர்மேலாக சூரியன் வரும்போது உலகம் முழுவதும் இரவும் பகலும் சமநேரமுள்ளதாக இருக்கும். இவ்வாறு ஆண்டுக்கு இரண்டு நாள்கள்தான் – மார்ச் 21, செப்டம்பர் 23 நிகழ்கிறது.
******
பொதுவாக ஆண் கொசுக்களுக்கு நம் ரத்தத்தின் மேல் விருப்பம் இருப்பதில்லை. பெண் கொசு தன் முட்டை உற்பத்திக்காக நம் ரத்தத்தில் இருக்கும் புரதம் மற்றும் இரும்புச் சத்தின்பால் ஈர்க்கப்பட்டு தேடி வருகிறது. நம்மைக் கடிப்பது பெண் கொசுக்களே!
******
உலகின் மிகப் பெரிய நூலகம்
அமெரிக்க நாட்டில் உள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்தான் உலகின் மிகப் பெரிய நூலகம் ஆகும். இந்நூலகம் வாசிங்டன் டி.சி.யில் உள்ளது. 1800 ஏப்ரல் 24 அன்று இந்நூலகம் தொடங்கப்பட்டது. இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கே சுமார் 15 கோடி ஆவணங்கள் உள்ளன. 6 கோடிக்கும் மேற்பட்ட கையெழுத்து மூலப்பிரதிகள் உள்ளன. 3 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. 10 கோடிக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இருக்கின்றன. சுமார் 50 இலட்சம் படங்கள் பாதுகாக்கப்படுகின்றன. 30 லட்சம் ஒலிப்பதிவுகள் உள்ளன. மொத்தம் 450 மொழிப் பதிவுகள் உள்ளன.