கொஞ்சம் தொண்டைக் கரகரப்பு, சளித் தொல்லையா இருக்கேன்னு கொஞ்சம் துளசி இலை சாப்பிடலான்னு துளசிச் செடியில கையை வெச்சேன். அய்யய்யோ அவாள எழுப்பாதேன்னு சத்தம். நான் பதறிப்போய் திரும்பிப் பார்த்தா ஒரு கோவில் அய்யர். என்ன விஷயம்? நான் யாரை எழுப்பினேன்னு கேட்டேன்.
மாலைப்பொழுதுக்கு அப்புறம் துளசிச்செடி தூங்கும். அதனால டிஸ்டர்ப் பண்ணாதேள். அவசியம் துளசி இலை வேணும்ன்னா கொஞ்சம் தண்ணிய அது மேல தெளிச்சு எழுப்பிட்டுப் பறிங்கோன்னாரு. அதான் நான் ஏற்கெனவே எழுப்பிட்டேனேன்னு சொல்லி திரும்பப் பறிக்கப் போனேன். கட்டைவிரல், ஆள்காட்டி விரல யூஸ் பண்ணாம சுண்டுவிரல், மோதிரவிரலால பறிங்கோன்னாரு. செடிக்கு அதிர்ச்சி குடுக்கக்கூடாதுன்னாரு. அடப்பாவிங்களா, ஒரு செடிக்குக் குடுக்கிற மரியாதையை சக மனிதனைத் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டுன்னு மனித உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கிறது இல்லையேன்னு கேட்டேன்.
துளசிச் செடியில லட்சுமி வாசம் செய்யறா, துளசிய தினமும் சாப்பிட்டு அதோட மகிமையப் பாருங்கோன்னாரு. உன் வீட்டு பீரோவில இருக்கிற பணம், நகையெல்லாத் தையும் வெளிய தூக்கிப்போட்டுட்டு லட்சுமி வாசம் செய்யற துளசிய ரொப்பி வெச்சுக்கோய்யான்னு சொல்லிட்டு மீன் கடையில நண்டு வாங்கிட்டுப் போய் என் வொய்ஃப்கிட்ட குடுத்தேன். அவ சமைச்ச நண்டு சூப், நண்டுத் தொக்குல சளி ஓடியே போச்சு.
– ராஜேஷ் தீனா