செய்திச் சிதறல்கள்

செப்டம்பர் 16-30 2019

உலகம் முழுவதும் 1,900 வகையான பூச்சிகளை மனிதர்கள் சாப்பிடுகிறார்கள். பூச்சிகளில் புரதச்சத்து அதிகம் உண்டு. பூச்சிகள் விற்பனையில் பாங்காக் முன்னிலையில் இருக்கிறது.

******

மனிதர்களுக்கு ஒரு கண்ணில் ஒரு லென்ஸ்தான். தட்டாம்பூச்சிகளுக்கோ ஒரே கண்ணில் 30,000 லென்ஸ்கள். ஈக்களின் கூட்டுக்கண்ணில் ஆயிரக்கணக்கான ஆறு பக்க லென்ஸ்கள் உள்ளன.

******

உயிரற்ற தாவரங்களும் விலங்குகளையும் உண்டு மறுசுழற்சி செய்வதால் பூச்சிகளால் மண் வளம் பெறுகிறது. பூச்சிகள் மூலம் மட்டுமே 30 சதவிகித உணவு கிடைக்கிறது. உலகில் 1 சதவிகித பூச்சிகளே தீமை தருபவையாக உள்ளன.

******

குளவிகளும் தேனீக்களும் மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். வட அமெரிக்காவில் காணப்படும் மொனார்க்  (Monarch butterfly) என்கிற வண்ணத்துப்பூச்சி இடப்பெயர்ச்சிக்காக சுமார் 3,000 கிலோமீட்டர் பறந்துசெல்லும்.

******

ஒரு வண்ணத்துப்பூச்சி பறப்பதற்கு அதன் உடலின் தட்பவெப்பம் 80 டிகிரிக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

வெட்டுக்கிளி தன் உடல் நீளத்தைப் போல் 40 மடங்கு தூரம் தாவும் சக்தி படைத்தது.

******

எச்.அய்.வி. ஒழிப்பு – புதிய தொடக்கம்

எச்.அய்.வி. நுண் கிருமி நமது உடலின் நோய்த் தடுப்பு சக்தியை தாக்கி பலவித அபாய நோய்களுக்கு இட்டுச் செல்கிறது. அமெரிக்காவிலுள்ள டெம்பிள் பல்கலைக்கழகமும் நெபரஸ்கா மருத்துவ ஆய்வு மய்ய ஆய்வாளர்களும் இணைந்து உயிருள்ள விலங்கின் ஜீனோமிலிருந்து எச்.அய்.வி. கிருமியின் டி.என்.ஏ.வை வெளியேற்றியுள்ளதாகக் கூறியுள்ளனர். இது ஒரு முதன்முறை சாதனையாகும். அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிகிச்சை உத்தியான லேசர் ஆர்ட்டையும்  (long acting slow effective release (LASER ART) ஜீன் திருத்த முறையையும் (gene editing)   இணைந்து இதைச் செய்துள்ளனர். எச்.அய்.வி பாதிக்கப்பட்ட மூன்றில் ஒரு எலியில் எச்.அய்.வி.-1 டி.என்.ஏ முழுவதும் வெளியேற்றப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *