செய்திக்கூடை

நவம்பர் 01-15
  • சந்திரனில் டைட்டானியம் மூலப்பொருள் பூமியில் உள்ளதைவிட 10 மடங்கு அதிகம் உள்ளதாக அமெரிக்க விண்கல ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • வளைகுடா நாடான ஓமனில் இருந்து கொண்டே ஓமனில் வசிக்கும் கேரள மக்கள் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்குப் பதிவு செய்யலாம் என்று ரஜாப் சட்ட நிறுவன சட்ட ஆலோசகர் செபஸ்டின் கே. ஜோஸ் கூறியுள்ளார்.
  • திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா. இந்துக் கல்லுரி மாணவிகள் சூரிய ஒளியில் இயங்கும் செல்பேசி சார்ஜரைக் கண்டுபிடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.
  • பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் சார்ஜென்ட், கிறிஸ்டோபர் சிம்ஸ் ஆகியோருக்குக் கிடைத்துள்ளது.
  • பருவநிலை மாற்றம் பற்றி அறிய எவரெஸ்ட் சிகரத்தில் வெப்கேமரா ஜெர்மன் விஞ்ஞானிகளால் பொருத்தப்பட்டுள்ளது.
  • பிரிட்டனின் லண்டன் ராயல் நிதமன்ற வளாக உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக இந்திய வழக்குரைஞர் ரபீந்தர் சிங் நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • ரவுடிகள் மிரட்டியதால் சங்கரராமன் கொலைவழக்கில் முரண் சாட்சி அளித்ததாக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பாலிடம் சங்கரராமனின் மனைவி பத்மா மனு கொடுத்துள்ளார்.
  • ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் தொடர்பாக கம்போடியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
  • லிபியாவின் மேனாள் அதிபர் மறைந்த கடாபியின் மகன்களுள் ஒருவரான முட்டாசிம் புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • குற்ற வழக்குகள் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தால் அவருக்கு அரசு வேலைவாய்ப்புப் பெறும் தகுதியில்லை என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • இலங்கை அதிபர் ராஜேபக்சேவுக்கு நீதிமன்றம் வெளியிட்ட சம்மனை இலங்கை பத்திரிகைகளில் வெளியிட அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
  • ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்சில் சூறாவளி, மழை வெள்ளத்துக்கு 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அய்.நா. அவை தெரிவித்துள்ளது.
  • பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜூலியன் பர்னெஸ் எழுதிய தி சென்ஸ் ஆப் ஆன் என்டிங் என்ற ஆங்கில நாவலுக்கு 2011ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *