காற்று மற்றும் நீர் இல்லாத காரணத்தால், நிலாவில் ஒரு தடம் 100 மில்லியன் வருடங்களுக்கு அப்படியே இருக்குமாம். எனவே, நீல் ஆம்ஸ்ட்ராங் பதித்த கால் தடம் அழியாச் சுவடாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
******
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளைவிட, இரண்டாவதாக இருக்கும் வெள்ளியே மிக அதிக வெப்பம் கொண்டது. காரணம், புதனைவிட அதிக அடர்த்தியான சுற்றுப்புறம் வெள்ளியில் இருப்பதால், காரீயம் உள்ளிட்ட உலோகங்களை உருக்கும் அளவுக்கு மிக அதிக வெப்பம் (468 C) வெள்ளியில் நிலவுகிறது.
******
நாம் எரிபொருளாகப் பயன்படுத்தும் மீத்தேன், ஒரு துணைக்கோளில் பெருங்கடலாகக் காணப்படுகிறது. அதுதான் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான, டைட்டன். பூமியைப் போலவே ஆறு, ஏரி, கடல் ஆகிய அனைத்தும் உடையது டைட்டன். பூமியில் தண்ணீர் என்பது டைட்டனில் மீத்தேன்.
******
சூரியக் குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட பிற கோள்களின் மொத்த எடையும், சூரியனின் எடைக்குச் சமம். பூமியைவிட சூரியன் 330,000 மடங்கு அதிக எடை உடையது.
******
சென்ற இதழில் “சாதிகளை உருவாக்கிய சதிகாரர்கள்’’ கட்டுரையின் முதல் பத்திக்கு அடுத்து கீழ்வரும் பத்தியை இணைத்துப் படிக்கவும்.
“இந்து மதக் கடவுள்களான பிரம்மனும், திருமாலும்தான் மக்களிடையே ஜாதிகள் உருவாகக் காரணமாக இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. உலகத்தின் படைப்புக் கடவுள் என்று இந்துக்களால் நம்பப்படுகின்ற பிரம்மன் என்பவர் தனது முகம், தோள், தொடை மற்றும் பாதம் ஆகிய பாகங்களிலிருந்து முறையே பிராமணன், சத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வகையான ஜாதிகளைப் படைத்ததாக மனுதர்மம் கூறுகிறது. ஆனால், திருமாலின் அவதாரமான கிருஷ்ணன் கீதையில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.’’
இது தான் ஆர்ய பார்ப்பன வர்ணாஸ்ரமம்
தமிழனுக்கு சூடு சொரணை வேண்டாமா?