விலங்குகளில் இனிப்புச் சுவையை உணரும் தன்மை நாய், எலி, பன்றிகளுக்கு மட்டுமே உண்டு. பூனை, கோழிகட்கு இனிப்புச் சுவை தெரியாது.
******
இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 6000 கி.மீ. இதில் 1200 கி.மீ. தமிழகக் கடற்கரையாகும்.
சிறுத்தை ஓடத் தொடங்கிய சில நொடிகளிலேயே 110 கி.மீ வேகம் கொள்ளும்.
******
உலகின் மிக அகலமாக சாலை
பிரேஸில் நாட்டில் மான்மெண்டல் ஆக்ஸிஸ் என்ற சாலை ஒன்று உள்ளது. இந்தச் சாலையில் ஒரே நேரத்தில் 160 கார்கள் இணையாகச் செல்ல முடியுமாம். இந்தச் சாலையின் நீளம் 24 கி.மீ. தூரமாகும். இந்தச் சாலையின் அகலம் 250 மீட்டர். ஆறு பாதைகளாகப் பிரிக்கப்பட்டு வாகனங்கள் செல்கின்றன.
இதுவே உலகின் மிக அகலமான சாலையாகும்.
******
மிகப் பெரிய நூல்
‘தென்னாட்டின் கதை’ என்ற அமெரிக்க நூலே உலகத்திலேயே மிகப் பெரிய நூலாகும். இந்நூல் வெளியான ஆண்டு 1925. இந்நூலின் உயரம்
6 அடி, 10 அங்குலம், அகலம் 9 அடி, 2 அங்குலம், கனம் ஒரு அடி. இந்த நூலின் மேலட்டை மாட்டுத்தோலால் ஆனது. ஒரு முழு மாட்டுத் தோலே இதில் பயன்படுத்தப்பட்டது. இந்நூலை ஒரு தனி நபரால் தூக்கிச் செல்ல முடியாது.