தந்தையின் சுயமரியாதைக்காகப் போராடும் மானமும் அறிவும் உள்ள ஒரு பள்ளி மாணவனைச் சுற்றிவரும் கதைதான் இந்தக் குப்பைக்காரன் குறும்படம். தந்தை அந்த கிராமத்தின் தூய்மைப் பணியாளர். அரசியல்வாதிகள் தூய்மையாக இருக்கும் தெருவில் குப்பைகளைக் கொட்டி அதை அகற்றும் போது கைதட்டி வரவேற்கும் ஊர்மக்கள், தனது தந்தையை எள்ளி நகையாடுவது ஏன்? என மகன் புரிந்துகொள்ள முயலுகிறான். ஒரு கட்டத்தில் புரிந்துகொண்டு தனது தந்தையோடே பெருமையுடன் ஒத்துழைக்கிறான்.
பள்ளிக் கூடக் காட்சியில், ‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று ஆசிரியர் பாடம் சொல்லித் தருவதைக் காட்டி இது குலக்கல்விக்கு ஆதரவான படம் அல்ல என்றும், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் படம் என்பதையும் காட்சிகளிலேயே குறிப்பாகக் காட்டி விடுகிறார் இயக்குநர் ஜஸ்டின்பிரபு. தயாரிப்பாளர் ராஜ். 21:13 நிமிடம் ஓடக்கூடிய இக்குறும்படத்தை இதே பெயரில் Youtubeஇல் காணலாம். பார்க்கவேண்டிய குறும்படம்.
– உடுமலை
Leave a Reply