Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நூல் அறிமுகம் : திராவிடம் அறிவோம்

நூல்: திராவிடம் அறிவோம்

ஆசிரியர்: வெற்றிச்செல்வன்

வெளியீடு: கருஞ்சட்டை பதிப்பகம்,

                  122/130, எம்.டி.ஆர் தெரு,               ரங்கராஜபுரம்,கோடம்பாக்கம்,                                                                    சென்னை-24.

 செல்பேசி: 044-42047162

                          பக்கங்கள்: 34              நன்கொடை: ரூ.30/-

திராவிடர் இயக்க வரலாறு, சாதனைகள் பற்றிய துணுக்குச் செய்திகளின் கோவைதான் இந்நூல். திராவிடம் பெயர் உருவாக்கத்தில் தொடங்கி நீதிக்கட்சி, அதன் தலைவர்கள், சுயமரியாதை இயக்கம், தந்தை பெரியாரின் சமுகப் புரட்சி சிந்தனைகள், செயல்பாடுகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அதன் சாதனைகள், இன்றைய சமூக மாற்றத்திற்கான தந்தை பெரியார் மற்றும் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்புகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர்.

மேலும் சுயமரியாதை வீரர்கள், வீராங்கனைகளின் வரலாற்றுப் புகழ்மிக்க சமூக புரட்சி, ஜாதி ஒழிப்பு செயல்பாடுகளையும், சிறு சிறு செய்திகளாக வழங்கியுள்ளார். திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை, தொண்டை, பங்களிப்புகளை புதிய நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இந்நூலை அன்பளிப்பாக வழங்கலாம்.

– வை.கலையரசன்