Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : ’ இந்த நூற்றாண்டு’

 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

எந்த நூற்றாண்டும் இல்லா முன்னேற்றம்;

இந்த நூற்றாண்டில் எழுந்ததே ஏற்றம்!

 

கால விரைவினைக் கடக்கும் வானூர்தி

ஞாலப் பரப்பினைச் சருக்கிற்றுப்பார் நீ!

 

தொலைபேசித் தொடர்பு தோழமை நட்பு!

அலைகடல் மலையை அறிந்தது பெட்பு!

 

வானொலி யாலே வையமொழிகள்

தேனொலி யாயின திக்கெலாம் கனிகள்!

 

ஏவுகணைகள் கோள் விட்டுக் கோளைத்

தாவின எங்குமே நாம் செல்வோம் நாளை!

 

ஒற்றுமை அமைதி ஓங்கிடத் தம்பி

முற்றும் அறுந்தெறி வேற்றுமை முட்கம்பி!

 

– குயில்