நேயன்
அஷ்டவசுக்களில் எட்டாவது வசுவான பிரபாசனைக் கணவனாக அடைந்த பிரகஸ்பதியின் சகோதரியான புவனீ என்பவருக்கு சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றுத் தேவதச்சனாக விளங்கிய விஸ்கர்மா புத்திரனாகப் பிறந்தார். துவஷ்டா எனும் பெயர் படைத்த அவனுக்கு சரேணு எனும் மகளிருந்தாள். பேரழகியான அவளை சூரியன் தனது மனைவியாக்கிக் கொண்டார்.
நற்குணவதியான அவள் தன் கணவனிடம் மிகுந்த அன்பு கொண்டவளாய் அவருடன் வாழ்ந்து இரு ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் பெற்றுக் கொடுத்தாள். சூரியனுடைய வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததால் சமிக்ஞாவினால் அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டாள். இதனால் தன் பிறந்த வீட்டையடைந்து தன் தந்தையான விஸ்வகர்மாவிடம் தன்னால் தன் கணவரின் வெப்பத்தைத் தாங்க முடியாததால் பிறந்த வீட்டிலேயே இருந்துவிடப் போவதாகக் கூறினாள். ஆனால் விஸ்வகர்மா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கணவனது இருப்பிடம்தான் அவள் இருக்க வேண்டிய இடம். அதுதான் பதிவிரதா தர்மம் என்று புத்திமதி கூறி அவளை மீண்டும் சூரியனிடமே திருப்பியனுப்பி விட்டார்.
தன் தந்தையின் அறிவுரைகள் சரிதான் எனப் பட்டதால் அவள் மீண்டும் சூரியனுடன் வாழ முயன்றாள். ஆனால், அவளால் சூரியனுடைய தகிப்பைத் தாங்க முடியவில்லை. அதனால் அவள் தன் கணவனை விட்டு விலகி வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என முடிவுக்கு வந்தாள். ஆனால், உலகத்துக்கு அதிபதியான தன் கணவனுக்கு அது தெரிந்து தன் மீது கோபம் ஏற்படாதிருக்கும் பொருட்டு ஒரு யுக்தியையும் கண்டுபிடித்தாள்.
நிழலில் பெண்ணை உருவாக்க முடியுமா?
தன் நிழலிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினாள். உருவத் தோற்றத்தில் அந்தப் பெண்ணுக்கும் அவளுக்கும் எவ்வித வித்தியாசமும் காணப்படவில்லை. ஒருவரையொருவர் மாற்றினாலும் யாரும் கண்டுகொள்ள முடியாத அளவு உருவ ஒற்றுமை அவர்களிடம் காணப்பட்டது.
சமிக்ஞாவின் நிழலிலிருந்து தோன்றிய அந்தப் பெண் அவளைப் பார்த்து வணங்கி, “அம்மா!” என்னை எதற்காக உண்டாக்கினீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்?’’ என்று கேட்டாள்.
தன்னால் உருவாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்குச் சாயாதேவி எனும் பெயரைச் சூட்டினாள். “சகோதரியே! என்னால் இங்கு தொடர்ந்து வாழ முடியாது. ஆகையால் நான் எனது பிறந்த வீட்டிற்குச் சென்று விடலாம் என முடிவெடுத்துவிட்டேன். என்னிடமிருந்து தோன்றிய நீ எனக்குப் பதிலாக இங்கு என்னுடைய இடத்தில் இருந்து என் கணவரையும் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். நான் போகின்ற செய்தியை ஒருவரிடமும் சொல்லக் கூடாது. அந்த ரகசியம் நம்மிருவருக்கிடையே இருக்கட்டும். என் குழந்தைகளை உன் குழந்தைகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஒரு குறையுமில்லாது நீ பார்த்துக்கொள்ள வேண்டும்! என்று சமிக்ஞா கூறினாள்’’ என்கிறது இந்து மதம்.
சூரியனுக்கு மனைவி. அவர்களுக்கு குழந்தை பிறந்தது என்பது அறிவியலுக்கு உகந்ததா? சூரியன் நெருப்புக் கோள். 9 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்போதே நம்மை சுட்டெரிக்கிறது. அது பூமியைப் போல பல ஆயிரம் மடங்கு பெரியது. அதற்கு உறுப்புகள் கிடையாது. உணர்வுகள் கிடையாது. அப்படியிருக்க அது உடலுறவு கொள்ள முடியுமா? அதை ஒரு பெண் நெருங்கதான் முடியுமா? பின் எப்படி சூரியனிடம் பிள்ளை பெற்றார்? பிள்ளை பெறும்வரை சுடாத சூரியன் அதன்பின் சுட்டது என்பது பிதற்றல் அல்லவா?
தன் நிழலில் அவள் ஒரு பெண்ணை உருவாக்கினாள் என்பது அறிவியலுக்கு ஏற்புடையதா? நிழலிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினாள் என்பது முழு முட்டாள்தன கருத்தல்லவா? இப்படி அறிவியலுக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையானதா?
விரதத்தின்மூலம் குழந்தை பெற முடியுமா?
காசிபருக்கு திதி என்றும் அதிதி என்றும் இரு மனைவிகள் உண்டு. அதிதியின் புத்திரன்தான் தேவர்களுக்குத் தலைவனான இந்திரன். இந்திரனின் சிறப்பையும் பெருமையையும் அறிந்த திதி, அவனைவிடச் சிறப்பான மகன் ஒருவனைப் பெறுவதற்குக் காசிபரை வேண்டினாள்.அவர் ஆலோசனைப்படி விரதம் கடைப்பிடித்துக் கருவுற்றாள். அவள் கருவுற்றவுடனேயே அவள் மேனியும் முகமும் பொலிவடைந்தன. அதைக் கண்ட அதிதி விசனமடைந்தாள். எங்கு அவளுக்குப் பிறக்கும் மகன், தன் மகனின் புகழுக்கும் செல்வச் சிறப்புக்கும் பாதிப்பு ஏற்படும்படி செய்து விடுவானோ என அஞ்சினாள். எனவே, அவள் தன் மகன் இந்திரனைப் பார்த்து, “மகனே! உன் பெரிய தாயாரின் வயிற்றில் உனக்குப் போட்டியாக ஒரு மகன் உருவாகியிருக்கிறான். அவளது விரதத்தின் காரணமாக அவள் பெறும் மகன் உன்னைவிட மிகுந்த வல்லமை வாய்ந்தவனாய், விளங்குவான் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் நீ எப்படியாவது உன் பெரிய தாயாரின் வயிற்றில் வளரும் கருவைச் சிதைத்துவிடு!’’ என்று எச்சரித்தாள்.
சூரியன் நெருப்புக் கோள். 9 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்போதே நம்மை சுட்டெரிக்கிறது. அது பூமியைப் போல பல ஆயிரம் மடங்கு பெரியது. அதற்கு உறுப்புகள் கிடையாது. உணர்வுகள் கிடையாது. அப்படியிருக்க அது உடலுறவு கொள்ள முடியுமா? அதை ஒரு பெண் நெருங்கதான் முடியுமா? பின் எப்படி சூரியனிடம் பிள்ளை பெற்றார்? பிள்ளை பெறும்வரை சுடாத சூரியன் அதன்பின் சுட்டது என்பது பிதற்றல் அல்லவா?
இந்திரன் தன் பெரிய தாயாரிடம் போய் வணங்கி, “அன்னையே! நீயும் எனக்குச் சொந்தத் தாயைப் போன்றவள். மிகவும் பலவீனமாய்க் காணப்படும் இந்நேரத்தில் உங்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்ய விரும்புகிறேன்’’ என்று கூறினான். அவளுக்குப் பல விதத்தில் பணிவிடைகள் செய்து மகிழ்ச்சியடைச் செய்தான். இவ்வாறு திதியிடம் மிகவும் பயபக்தி உடையவன்போல் நடித்துக்கொண்டே, தான் வந்த காரியத்தை முடித்துவிட வேண்டுமென்று பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் திதி தூங்குவதை இந்திரன் கண்டான்; அவளின் காலடியில் அமர்ந்து கால்களைப் பிடித்துவிட்டான். அது கண்டு திதிக்கு அவன்மீது பாசம் பொங்கியது. அப்படியே அமைதியாக உறங்கிவிட்டாள். அத்தருணம் பார்த்து, இந்திரன் சிறிய உருவம் எடுத்து, அவளது கர்ப்பத்துக்குள் நுழைந்தான்; தனது வஜ்ராயுதத்தால் அந்தச் சிசுவைத் துண்டு துண்டாக வெட்டினான். வலி தாங்க முடியாமல் விழித்த திதி, உண்மை அறிந்து பெருங்கோபம் கொண்டாள். “அடே மூடனே! தாய் என்று என்னை அழைத்துவிட்டு இவ்வாறு கொடிய பாவத்தைச் செய்தாயே! இனி நீ உன் பதவியை இழந்து அலைவாயாக!’’ என்றாள் என்கிறது இந்துமதம். பருவமடைந்த ஆணுடன் பெண் உடலுறவு கொண்டுதான் பிள்ளை பெறமுடியும். அதுதான் அறிவியல். ஆனால், விரதம் இருந்தால் குழந்தை பிறக்கும் என்பது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? ஒருத்தியின் கருப்பைக்குள் ஒருவன் நுழைய முடியுமா? அதுவும் வாளுடன் நுழைய முடியுமா? வாளுடன் நுழைந்து பல துண்டாக கருவை வெட்டினான் என்பதும், அதற்காக சிறிய உருவம் எடுத்தான் என்பதும் அறிவியலுக்கு எதிரானது அல்லவா? ஒருவன் தன் உருவத்தை சிறிதாக மாற்ற முடியாதே! அறிவியல் உண்மை அப்படியிருக்க அறிவியலுக்கு எதிரான மூடக் கருத்துக்களைக் கூறும் இந்து மதம் அறிவியலுக்கு அடிப்படை என்பது பிதற்றல் அல்லவா?
(சொடுக்குவோம்)