சென்னை புத்தக சங்கம கண்காட்சியினை துவக்கி வைக்கும் து,அரிபரந்தமான், ச.இராசரத்தினம், அபிராமி இராமநாதன், ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி பூங்குன்றன் மற்றும் வீ.குமரேசன்.
உ வை க அரசன்
இளைய தலைமுறையினருக்கு புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவும், புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் உலக புத்தக நாளையொட்டி ‘சென்னை புத்தகச் சங்கமம்’ என்னும் பெயரில் மாபெரும் புத்தகக் காட்சியை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் நடத்தி வருகிறது. 2013ஆம் ஆண்டு தொடங்கிய இந்த புத்தக நாள் கொண்டாட்டங்கள் 2016 முதல் சிறிய மாற்றத்திற்கு உள்ளாகி இங்கு கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் பாதி விலையில் (50% தள்ளுபடியில்)கிடைக்கும் என்ற அளவில் மாற்றப்பட்டது.
ஏழாம் ஆண்டாக இந்த ஆண்டு ஏப்ரல் 20இல் தொடங்கி ஏப்ரல் 24 வரை சென்னை பெரியார் திடலில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. முழுமையான ‘குளுகுளு’ அரங்கில் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கான ‘திறனாக்கப் பயிற்சிகளும்’, ‘திரைப்பட விழாவும்’ நடைபெற்றன.
முதல் நாள் 20.4.2019 அன்றுகாலை 10 மணியளவில் வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம் அவர்கள் தலைமையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் சென்னை புத்தகச் சங்கமத்தை திறந்துவைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை தலைவர் கலைமாமணி அபிராமி இராமநாதன் அவர்கள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
குழந்தைகளுக்கான போட்டியில் பங்கேற்று சான்றிதழுடன் குழந்தைகள்.
புத்தகங்களை ஆர்வமாக வாங்கும் வாசகர்கள்.
அன்று மாலை 6 மணியளவில் உரையரங்கம் நடைபெற்றது. திராவிடன் நிதி நிறுவன தலைவர் த.க.நடராசன் தலைமை வகித்தார். இயக்குநர் நடிகர் பொன்வண்ணன் அவர்கள் பங்கேற்று “என்னைச் செதுக்கிய புத்தகங்கள்’’ என்னும் தலைப்பில் சிறப்பான கருத்துரையை வழங்கினார்.
இரண்டாம் நாள் 21.04.2019 அன்று மாலை 6 மணியளவில் “இளைஞர்களும் வாசிப்பும்’’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் பதிப்பாளர் கோ.ஒளிவண்ணன் ஒருங்கிணைத்து நடத்தினார். இணையதள தொழில்நுட்ப வல்லுநர் சையது ஹாசன், தொழிலதிபர் கணினி வல்லுநர் சுரேஷ் சம்பத், மனிதவள அலுவலர் ரகுபதி மதுமிதா, இளம் புத்தக வாசிப்பாளர் ஜாய்ஸ் ஆகியோர் பங்கேற்று வினாக்களுக்கு விடையளித்தனர். மூன்றாம் நாள் 22.04.2019 அன்று மாலை நடைபெற்ற நிகழ்விற்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தலைமை தாங்கினார். கவிஞர் நெல்லை ஜெயந்தா “வாசிப்பை சுவாசிப்போம்’’ என்னும் தலைப்பில் சிறப்பான உரையாற்றினார்.
நான்காம் நாள் 23.04.2019 அன்று புத்தக நாள் பெருவிழா _ புத்தகர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். புத்தகங்களை பாதுகாத்து வாசிக்கும்
குழந்தைகளுக்கு பயிற்சிகளும் போட்டிகளும்
கோடை விடுமுறையில் உள்ள குழந்தைகளுக்கு புதுமையான முறையில் திறனாக்கப் பயிற்சிகள் நடைபெற்றன. குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு பயிற்சிகளும் வினாடி_வினா போட்டியும் முதல் நாள் நடைபெற்றன. இரண்டாம் நாள் தவறின்றி தமிழ் எழுதப் பயிற்சிகளும் தமிழ் போட்டியும் நடைபெற்றன. மூன்றாம் நாள் வண்ணக் காகிதங்களளைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. நான்காம் நாள் ஒளிப்பட அடிப்படை பயிற்சியும், புதையல் போட்டியும் இறுதிநாள் ஓவியப் பயிற்சி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும், எம்.ஜி.எம் பொழுதுபோக்குப் பூங்கா செல்வதற்கான இலவச நுழைவுக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.
கலந்துரையாடலில் பங்கேற்ற வாசகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்.
கவிஞர் கலி.பூங்குன்றன், நாஞ்சில் சம்பத், ஆசிரியர் கி.வீரமணியிடமிருந்து புத்தகர் விருது பெறும் பா.பெருமாள், பொன்.மாரியப்பன்.
பழக்கத்தை மேம்படுத்த உழைக்கும் ‘பள்ளி நூலகம்’ ஆசிரியர் முனைவர் பா.பெருமாள் அவர்களுக்கும், தமது முடித்திருத்த நிலையத்தையே நூலகமாக மாற்றி அறிவுத் தொண்டாற்றிவரும் தூத்துக்குடி பொன்.மாரியப்பன் அவர்களுக்கும் இந்த ஆண்டுக்கான ‘புத்தகர் விருதுகள்’ வழங்கப்பட்டன.
நடிகர் பொன்வண்ணன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்
கவிஞர் கலி.பூங்குன்றன், த.க.நடராசன்
அய்ந்து நாட்களும் திரைப்பட விழா அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. காலை 11 மணி முதல் மாலை வரை நடைபெற்றது. தமிழ்நாட்டின் அய்ந்து முன்னணி மாற்று திரைப்பட அமைப்புகளான நிழல் திரைப்பட இயக்கம், பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை, ஆர்.பி.அமுதன் அவர்களின் மறுபக்கம், தமிழ் ஸ்டுடியோ திரைப்பட இயக்கம், காஞ்சனை திரைப்பட இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த திரைப்பட விழாவில் ஏராளமான குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை பற்றிய ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் நடைபெற்றன.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விருதுகளை வழங்கி பாராட்டுரையாற்றினார். இலக்கியச் சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள், “அறிவியக்க புலமை கொண்ட செந்தமிழ் நாடே!’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
புத்தக கண்காட்சி நிறைவு நாளில் உரையாற்றிய நடிகை ரோகினி,
மஞ்சை வசந்தன், கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் வீ.குமரேசன்,த.க.நடராசன்,ச.இன்பக்கனி.
24.04.2019 அன்று மாலை நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணியின் மாநில செயலாளர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் தலைமை வசித்து உரையாற்றினார். திரைக்கலைஞர் படைப்பாளர் ரோகிணி அவர்கள், “படைப்பூக்கம் தரும் புத்தக வாசிப்பு’’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.