Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : அறி(ழி)வியல்

ஏவுகணையும் தாவுகுண்டும்

எதிரெதிர் மோத

காவுகொடுத்து மனிதஇனத்தின்

கதை முடிக்க

மேவுகின்ற ஆதிக்கத்தின்

கூவுங் குரல்!

 

மனித நேயத்தை

மண்ணில் புதைந்து

விண்முட்ட எழுந்த

விபரீத மாளிகை!

உடல் உழைப்பை

உதறச் செய்த

உல்லாச வாழ்வின்

 

உந்து சக்தி?

ஆக்கத்திற் குதவும்

அற்புதச் சக்தியை

அழிவுச் செயலுக்கு

அனுமதிக் கலாமா?

 

காக்கவும் கடக்கவும்

வளர்க்கவும் வாழவும்

உயரவும் உவக்கவும்

உலகினில் அறிவியலை

பலன்தரச் செய்வோம்

நலன்பெற வாழ்வோம்!

 

– மஞ்சை வசந்தன்