ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23 அய்.நா.சபையின் உறுப்பு அமைப்பான யுனெஸ்கோ மன்றத்தால் உலக புத்தக நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நாளையொட்டி இளைய தலைமுறையினருக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக புத்தக நாளை (ஏப்ரல் 23) முன்னிட்டு 2013ஆம் ஆண்டு முதல் சென்னை புத்தகக் கண்காட்சி சென்னையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை காட்சிப்படுத்துகின்றன. ஏழாம் ஆண்டாக இந்த இந்த ஆண்டு ஏப்ரல் 20 முதல் 24 வரை நடைபெறுகிறது.
மேலும், குழந்தைகளுக்கு திறனாக்கப் பயிற்சிகளும், போட்டிகளும் நடத்தப்படுகின்றன. மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளும், அறிஞர் பெருமக்களின் உரைகள், புத்தகங்களை சேகரித்து பாதுகாத்து பிறருக்கு உதவும் உள்ளங்களுக்கு ‘புத்தகர் விருது’ வழங்கும் விழா போன்றவை நடைபெறுகின்றன. 2016ஆம் அண்டு முதல் இங்கு விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது.