Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : காவிக் கூட்டணி கதையை முடிப்போம்!

“நக்கும் நாய்க்கு

செக்கு என்ன

சிவலிங்கம் என்ன….?’’

 

மொய்க்கும் ஈய்க்கு

மலர் என்ன

மலம் என்ன…?

 

சுருட்டும் சூதர்க்கு

கண்ணீர் என்ன

தண்ணீர் என்ன…?

 

மேய்கிற கயவர்க்கு

தாய் என்ன

சேய் என்ன…?

 

காட்டுத் தீய்க்கு

தேக்கு என்ன

பாக்கு என்ன…?

 

ஓட்டுப் பொறுக்கிக்கு

நாடென்ன

மக்களென்ன…?

 

ஈட்டும் வருவாயே

இலக்கு! இலக்கு!

 

கூட்டுச் சேர்ந்திட

கொள்கையாவது

குறிக்கோளாவது

நோட்டும் சீட்டுமே

நோக்கம்! நோக்கம்!

 

அரசியல்  வணிகர்களை

அறவே விலக்குவோம்!

 

காவிக் கூட்டணியின்

கதையை முடிப்போம்!

 

– மஞ்சை வசந்தன்