என்னதான் செல்போன் கேமராக்களில் நல்லத் தரத்தில் புகைப்படம் எடுக்க முடிந்தாலும் சில நுண்ணிய விஷயங்களை எடுக்கும்போது அத்தனை தெளிவாக இருப்பதில்லை. ப்ளாக் ஐ நிறுவனத்தினர் மேக்ரோ ஜி4 லென்ஸ் என்னும் ஒரு லென்ஸை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனை நமது செல்போனின் முன்புற அல்லது பின்புற கேமராக்களில் எதில் வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். இந்த லென்ஸ் மிக மிக துல்லியமாக ஒர தேர்ந்த புகைப்படக் கலைஞரின் நுட்பத்தோடு போட்டோ எடுக்க உதவும். இதன்மூலம் பார்க்கப்படும் பொருட்கள் தினைந்து மடங்கு பெரிதாகத் தோன்றும்.
இதிலிருக்கும் யூனிவர்சல் கிளிப் வசதியுடன் ஐ போன், ஆண்ட்ராய்டு போன்கள், டேப்லெப், லேப்டாப் என்று எதில் வேண்டுமானாலும் இந்த லென்ஸை பொருத்திக் கொள்ளலாம். இரண்டு பூச்சுகளுடன், கைகளால் பாலிஷ் செய்யப்பட்டுள்ள இந்த லென்ஸில் தேவையற்ற பிரதிபலிப்புகள் இன்றி புகைப்படம் எடுக்கலாம். சிறிய பூச்சிகள், பூக்களின் மகரந்தம் என்று நுண்பொருட்களை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு மிகவும் பயன்படும் இந்த மேக்ரோ ஜி4 லென்சின் விலை சுமார் ரூ.5,000.
Leave a Reply