- புதுப்பெருங்களத்தூர் காயத்ரி நகரில் உள்ள வீரசக்தி விநாயகர் கோவிலின் பின்புறம் வழியாகச் சென்று உண்டியல் மற்றும் 6 கலசங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பீர்க்கங்கரணை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- சென்னை, சோழிங்கநல்லூர் காந்தி நகரிலுள்ள அங்காள துர்கை அம்மன் கோவில் கும்பாபிசேகத்தில், தங்கள்மீது தண்ணீர் படவேண்டும் என்று பக்தர்கள் கூட்டம் நெருக்கியதில் விக்னேஷ்வரா நகரைச் சேர்ந்த செல்வியின் தாலிச் சங்கிலியை (5 பவுன்) மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். மேலும், கூட்டத்திலிருந்த பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெங்கடே சனின் குழந்தை சபரிசிறீயின் 1லு பவுன் சங்கிலியும், கேளம்பாக்கத்தைச் சேர்ந்த குமாரின் மகன் அஜய்கிருஷ்ணாவின் 1 பவுன் சங்கிலியும் திருடப்பட்டுள்ளன.
- சென்னை அண்ணா நகரில் உள்ள நாகலிங்க ஈஸ்வரி அம்மன் கோவிலிலும் திருமங்கலம் என்.வி.என். நகரில் உள்ள விசித்திர விநாயகர் கோவிலிலும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
- சென்னை ஏழுகிணறு குப்பையர் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் உண்டியல் பணத்தையும், அங்கிருந்த சிலைகளுக்குப் போட்டிருந்த வெள்ளி நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
- பொன்னேரியை அடுத்த ஆண்டாள்குப்பம் என்னும் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் கதவை உடைத்து 30 லட்சம் மதிப்புள்ள நடராஜர், மாணிக்கவாசகர், சிவகாமசுந்தரி அய்ம்பொன்சிலைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply