இராகுல் காந்தியின் எழுச்சியுரை!
மஞ்சை வசந்தன்
12.04.2019 அன்று சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய இடங்களில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இராகுல்காந்தி பேசிய பேச்சுகள், அவரது கொள்கைத் தெளிவை, சமூக நீதியின்பால் கொண்ட பிடிப்பை, ஏழை எளிய மக்களின் மேம்பாட்டில் கொண்டுள்ள அக்கறையை, அவருக்குள்ள வேடமில்லா உண்மைத் தன்மையை வெளிப்படுத்துவதாய் அமைந்தன.
இந்திய வரலாற்றில் இடம் பெறும் பதிவுகள்
அது மட்டுமன்றி, அவர் அப்பரப்புரைகளில் பேசிய பேச்சுகள் இந்திய வரலாற்றில் இடம் பெற்று நிலைத்து தெளிவூட்டக்கூடிய வரலாற்றுப் பதிவுகளாயும் அமைந்தன.
குறிப்பாக அவர் பேசிய,
தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ். ஆளமுடியாது!
தமிழகம் என்பது வரலாற்றுச் சிறப்புடைய மண். அப்படிப்பட்ட தமிழகத்தை நாக்பூரில் இருந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். ஆள நினைக்கிறார்கள். அந்த நினைப்பு நிறைவேறாது. தங்கள் வரலாற்றைத் தாங்களே நிர்ணயிப்பவர்கள் தமிழர்கள் அவர்கள் விரும்பாத எதையும் அவர்கள் மீது திணிக்க முடியாது!
பெரியார் நூலை மோடி படிக்க வேண்டும்!
“தமிழகத்தின் தொன்மை, பெருமை பற்றி மோடிக்குத் தெரியாது. எனவே, பெரியாரின் புத்தகத்தை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். அதன் பிறகாவது அவர் தமிழ்நாட்டைப் பற்றி புரிந்துகொள்வார். தமிழக மக்களை புறக்கணிப்பதை காங்கிரஸ் பொறுத்துக் கொள்ளாது’’ எனும் கருத்துகள் இந்திய வரலாற்றில், காங்கிரஸ் வரலாற்றில், தமிழக வரலாற்றில் முக்கியப் பதிவாகும். மேலும், அவர் அன்று பேசிய பேச்சுக்கள் அனைத்தும் ஆழமான, தேவையான மனிதநேயக் கருத்துக்கள்!
‘நீட்’ தேர்வில் நீதியான நிலைப்பாடு
‘நீட்’ தேர்வு தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், எப்படிப்பட்ட தேர்வு முறை வேண்டும் என்றும் என்னிடம் சொன்னார்கள். நான் கேள்விப்பட்டேன், அனிதா என்ற மாணவி, நீட் தேர்வுமூலம் தற்கொலை செய்துகொண்டார் என்று. தேர்தல் அறிக்கையில் ஒரு வரி இருக்கும். அந்த வரி, அனிதாவிற்கு மரியாதை செலுத்தவே சேர்க்கப்பட்டது. `நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என தமிழ்நாடு முடிவு செய்துகொள்ளட்டும். தமிழகத்தை நிர்ப்பந்தம் செய்யமுடியாது’ என்பதே அந்த வரி.
நன்றி : ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’
விவசாயிகளுக்கு விடிவு!
எங்கள் தேர்தல் அறிக்கையில் இதுபோன்ற பல்வேறு உதாரணங்கள் உள்ளன. மக்கள் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் நலன் சார்ந்து இருக்கிறது. நியாய் என்ற திட்டம், காங்கிரஸ் கட்சி நாட்டிற்குச் செய்ய இருக்கும் திட்டம்தான் அது. மோடி அரசு, பல்லாயிரம் கோடி ரூபாயை 15 ‘கோடீஸ்வரர்களுக்குக்’ கொடுக்கிறது. நாங்கள் 25 கோடி மக்களுக்கு பணத்தைக் கொடுப்போம். 3லு பைசாதான் ஏழை மக்களுக்குக் கொடுக்கிறது மோடி அரசு. ஆனால், 20 விழுக்காடு மக்களுக்கு 72 ஆயிரம் ரூபாயை காங்கிரஸ் கொடுக்க இருக்கிறது.
மோடி போல 15 லட்ச ரூபாய் கொடுப்பேன் என்று பொய் சொல்ல மாட்டேன். இது, பொருளாதாரத்தைப் பாதிக்காது. மேலும் வலுவாக்கும். மோடி, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி விதித்து, உங்கள் பைகளில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டார். கையில் உள்ள பணத்தை வங்கியில் செலுத்தச்சொல்லி மக்களையும், வியாபாரிகளையும், விவசாயிகளையும் வதைத்தார். 5 வகையான கொடுமையான வரியை நாட்டு மக்களிடம் விதித்து, பல படிவங்களை பூர்த்திசெய்யச் சொல்லி, 28 விழுக்காடு வரியை மக்களிடம் விதித்தார். பணத்தை உங்களிடம் இருந்து எடுத்து, நீரவ்மோடி, மல்லையா போன்ற மோடியின் நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்தார்.
நான் கேள்விப்பட்டேன், அனிதா என்ற மாணவி, நீட் தேர்வுமூலம் தற்கொலை செய்துகொண்டார் என்று. தேர்தல் அறிக்கையில் ஒரு வரி இருக்கும். அந்த வரி, அனிதாவிற்கு மரியாதை செலுத்தவே சேர்க்கப்பட்டது. நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என தமிழ்நாடு முடிவு செய்துகொள்ளட்டும். தமிழகத்தை நிர்ப்பந்தம் செய்யமுடியாது
நன்றி : ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’
காவிகளின் காழ்ப்பு அரசியலும் – காங்கிரசின் அன்பு அரசியலும்!
மக்கள், வாங்கும் சக்தியை இதனால் இழந்தார்கள். தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி, ஒருகட்டத்தில் மூடினார்கள். இதனால், வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. திருப்பூர், காஞ்சிபுரம் போன்ற தொழில் நகரங்கள் இன்று மோடியால் முழுவதும் முடங்கியுள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் மூடப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்தும் இயங்கும் மோடியைத் தவிர. மோடி எப்போது மகிழ்ச் சியாக இருப்பார் என்றால், கோடிகளை எடுத்து ‘கோடீஸ்வரர்களிடம்’ கொடுக்கும்போதுதான். மக்களிடையே வெறுப்பு அரசியலை விதைக்கிறார் மோடி. நாங்கள் அன்பை உள்ளடக்கிய அரசியலைச் செய்கிறோம். நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கும்போது, மோடி சக்தி இழந்துவிடுவார். நாம், வெறுப்பு அரசியல் மூலமாக, அவரின் வெறுப்பு அரசியலை எதிர்க்கப் போவதில்லை. அன்பு, மரியாதை போன்ற அரசியல் மூலமாக எதிர்க்க இருக்கிறோம்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கை பாதித்திருக்கிறது. மத்திய அரசில் 22 லட்சம் காலியிடங்கள் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் ஓராண்டிற்குள், அந்தக் காலியிடங்கள் நிரப்பப் படும். பட்டியலின மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பஞ்சாயத்துகளில் 10 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவை நிரப்பப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால், அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரிய வேண்டும். லஞ்சம் கொடுக்க வேண்டும். ஆனால், 2019-க்கு பிறகு, எந்த இளைஞனும் எந்த அரசு அலுவல கத்திற்கும் சென்று அனுமதி பெறவேண்டியதில்லை. லஞ்சம் கொடுக்க வேண்டாம். மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக அந்தத் தொழிலை நடத்திய பிறகு அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
“தமிழகத்திற்கு வந்தால் புது உற்சாகம் பெறுகிறோம்!”
தமிழகத்தின் எதிர்காலத்தை தமிழர்களே நிர்ணயிப்பார்கள். இந்தக் கூட்டணி, அரசியல் கூட்டணி மட்டுமல்ல… மிகப்பெரிய காரியத்தை செய்துகாட்ட வேண்டும் என்பதற்கான கூட்டணி. காங்கிரஸ் கொடுக்கும்
72 ஆயிரம் ரூபாய் பணம், அந்தக் குடும்பத்தின் பெண்களின் பெயரில்தான் வரவு வைக்கப்படும். நாடாளுமன்றத்தின் இரு சபைகளில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்படும். மத்திய அரசுப் பணியிடங்களில் 33% பெண்களுக்காக ஒதுக்கப்படும். எப்போது தமிழகத்திற்கு வந்தாலும், நீங்கள் காட்டும் அன்பும் பாசமும் என்னை உற்சாகத்தோடு திரும்பிச்செல்ல வைக்கிறது!” என்று கூறி தனது உரையை முடித்தார் ராகுல் காந்தி.
அவரின் ஆங்கிலப் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் மொழிபெயர்த்தார். இந்தக் கூட்டத்தில், தேனி தொகுதி முன்னாள் எம்.பி ஆரூண், தமிமுன் அன்சாரி, தி.மு.க-வின் அய்.பெரியசாமி மற்றும் பெரியகுளம் தி.மு.க வேட்பாளர் சரவணகுமார், ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளர் மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் உணர்ச்சி பூர்வ உரையை சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றினார்.
நன்றி : ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’
இரண்டு கொள்கைகளுக்க இடையில் போராட்டம்!
“2019ஆம் ஆண்டு தேர்தல் என்பது இரண்டு கொள்கைகளுக்கிடையேயான தேர்தல் _ இரண்டு பார்வைகளுக்கிடையேயான தேர்தலாக அமைந்திருக்கின்றது.
பாரதிய ஜனதா கட்சி, ஒற்றை நோக்கம், ஒற்றை வரலாறு, ஒற்றை பண்பாடுதான் இந்த நாட்டில் நிலவ வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த நாட்டை ஒரே கருத்துதான் ஆளவேண்டும் என்று கூறுகிறார்கள்.
தேனி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார்.
இன்னொரு பக்கத்தில் காங்கிரஸ் இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இங்கே பல்வேறு பார்வைகள் பல்வேறு கலாச்சாரங்கள் இருக்கின்றன என்று சொல்கிறோம். பல்வேறுபட்ட மொழிகள், பல சிந்தனைகள் இந்த நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்றன என்று சொல்கிறோம்.
நாங்கள் இந்த அனைத்து சிந்தனைகளும், அனைத்து கலாச்சாரங்களும், ஒன்றிணைந்து பணியாற்றி இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று சொல்கிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் தமிழ்நாடு நாக்பூரில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
தமிழகத்தை பிரதமர் அலுவலகம் ஆளக் கூடாது. தமிழகத்தை தமிழக அரசே ஆளும் நிலையை நாங்கள் உருவாக்குவோம். நாங்கள் தமிழர்களின் குரல் இந்தியாவை ஒரு வலிமைமிக்க நாடாக உருவாக்குவதில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று நம்புகிறோம்
அவர்கள் பிரதம மந்திரியின் அலுவலகம்தான் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால், தமிழகத்தை பிரதமர் அலுவலகம் ஆளக் கூடாது. தமிழகத்தை தமிழக அரசே ஆளும் நிலையை நாங்கள் உருவாக்குவோம். நாங்கள் தமிழர்களின் குரல் இந்தியாவை ஒரு வலிமைமிக்க நாடாக உருவாக்குவதில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று நம்புகிறோம். நாங்கள் தமிழர்களை மதிப்பதும், தமிழ் மொழியை மதிப்பதும், தமிழ் பண்பாட்டை மதிப்பதும், தான் ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்கக் கூடியது என்று நம்புகிறோம்.
அதிகாரப் பகிர்வு என்பது மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு குரல்களும், பல்வேறு மொழிகளும் பாதுகாக்கப்படுவதுதான் நல்ல இந்தியாவுக்கு எடுத்துக்காட்டு என்று நம்புகிறோம்“ என்று அவர் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய கருத்துக்கள் என்றும் தமிழர்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் கருத்துக்கள் ஆகும்.