மைக்கேல் சடா
- சாம்பியா நாட்டின் புதிய அதிபராக மைக்கேல் சடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இலங்கை அதிபர் ராஜபக்சே மீது, படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலி தளபதி ரமேசின் மனைவி அமெக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
- ஆல்பா கதிர்வீச்சு மருந்தின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தும் முறையை லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- வரும் கல்வியாண்டு முதல் (2012-_13) எட்டாம் வகுப்புவரை மதிப்பெண்களுக்குப் பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு முடிவுசெய்துள்ளது..
- பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கிடையே 560 கி.மீ. நீளமும் 240 கி.மீ. அகலமும் கொண்ட ஆங்கிலக் கால்வாயை நீந்தி இந்தியாவுக்கான பிரிட்டன் தூதரக அதிகாரி ராஜசேகரின் மகள் ரம்யா (18) சாதனை படைத்துள்ளார்.
- ஜப்பான் நாட்டில் 4 நிமிடம் ஏற்பட்ட நிலநடுக்கப் பாதிப்பினைக் காட்டும் படங்கள் அடங்கிய புத்தகத்தை http://fotohaus.jimdo.com என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.
- இந்திய ராணுவப் படைப்பிரிவில் முதல்முறையாக ஜவான் பதவிக்கு சாந்தி டிக்கா என்ற பெண் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
- அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய உதவும் இணையதள முகவரி www. tnstc.in
- உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்கள்: 18004257072, 18004257073, 18004257074 மற்றும் 24753001, 24753002.
- சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்கள் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் (www.pallikalvi.in) வெளியிடப்பட்டுள்ளன.
- செவ்வாய் கிரகம் முழுவதும் தண்ணீர் இருப்பது அய்ரோப்பாவின் விண்வெளி ஏஜென்சி அனுப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் புரோய் விண்கலமும் அமெரிக்காவின் விண்கலமும் பூமிக்கு அனுப்பிய தகவல்களின் மூலம் தெரிய வந்துள்ளது.
- வாகனங்களில் விபத்து ஏற்பட்டவுடன் சென்சார் கருவியின் மூலம் விபத்து நடைபெற்ற இடம் குறித்த தகவலைக் கணினிக்கு அனுப்பி, அத்தகவலை இணையதளம் மூலமாக மருத்துவமனைக்குக் கிடைக்கச் செய்யும் கருவியை சென்னையிலுள்ள அருணை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், கணினியை மவுசுக்குப் பதிலாக மனிதர்களின் கண் அசைவிலேயே இயக்கும் கருவியையும் வடிவமைத்து இந்தியத் தொழில்நுட்பக் கல்வி அமைப்பின் (அய்.எஸ்.டி.) விருதுகளைப் பெற்றுள்ளனர்.
- ராஜீவ் காந்தியை தற்கொலைத் தாக்குதலில் கொலை செய்த தனுவுக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியதாக மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.அய்) இணையதளத்தில் (cbi.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.