Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நூல் அறிமுகம்

நூல்:    மோடி ஏன் நமக்கானவர் அல்ல?

ஆசிரியர்: பழனி ஷஹான்

வெளியீடு: நன்செய் பிரசுரம், திருத்துறைப்பூண்டி.

செல்: 97893 81010, 90923 36999

விலை: 45/-  பக்கம்: 48

2014ஆம் ஆண்டு மே மாதம் பதவியேற்றதிலிருந்து ஜூன் 2017 வரையிலான மோடி ஆட்சியின் சகிக்க முடியாத கொடுமைகளையும் கேடுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக இக்கட்டுரைத் தொகுப்பு அமையப் பெற்றுள்ளது.

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது 3000 முஸ்லீம்களை இனப் படுகொலை செய்த மோடி, அதையே விரிவுபடுத்தி தாழ்த்தப்பட்டவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களை பிரதமராகப் பதவியேற்று சிதைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை மிக அழுத்தமாய் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

துளிக்கூட பயனில்லாமல் வெளிநாடுகளுக்கு ஊர் சுற்ற கிளம்புவது, விவசாயிகளை நிந்தித்தது, இந்திய மக்களை நிலைகுலையச் செய்த பண மதிப்பிழப்பை நடைமுறைப் படுத்தியது, ஜி.எஸ்.டி வரியை அமல்படுத்தியது. 40,000 கோடி ரூபாய் வியாபம் ஊழல், வாக்குப் பதிவு எந்திரத்தில் மோசடி செய்தது. இப்படி மோடி என்ற சர்வாதிகாரியின் மோசடிகளை யெல்லாம் மிகத் துணிச்சலோடு தோலுரித்திருக்கிறார் நூலாசிரியர் பழனி ஷஹான். இன்றைய இளைஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

– இனியன்