பெண்ணால் முடியும் : 182.5 கிலோ எடை தூக்கிய சாதனைப் பெண்!

மார்ச் 16-31 2019

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த மாணவி வி.விஷாலி. தமிழ்நாடு வலு தூக்கும் சங்கம் மற்றும் சென்னை மாவட்ட வலு தூக்கும் சங்கம் சார்பில், சமீபத்தில் பெரம்பூரில் நடந்த மாநில அளவிலான வலு தூக்கும் போட்டியில், 410 கிலோ தூக்கி ‘வலிமையான பெண்’ என்னும் பட்டத்தை வென்றுள்ளார்.

ஆண்களே விளையாடத் தயங்கும் இந்த வலு தூக்கும் விளையாட்டுப் போட்டியில், பெண்ணாக கலந்துகொண்டு சாதனைகள் பலவும் புரியத் தயாராகி வருகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து வரும் வி.விஷாலி தன்னைப் பற்றி கூறுகையில்,

“என் அப்பா வி.விஜயகுமார் வங்கி ஊழியர். அம்மா ஜெயந்தி, எனக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை இருக்கின்றனர். நம் நாட்டில் பெண்கள் அதிகளவிலான எடை தூக்கும்போது, எதிர்காலத்தில் உடலளவில் பிரச்சினை வரும் என்ற பயம் உள்ளது. ஆனால், இந்த விளையாட்டில் ஈடுபடும்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. மனதளவில் வலிமையான பெண்களை, இந்த விளையாட்டு இன்னும் உடலளவிலும் வலிமையாக்கும் என்பதே உண்மையாகும்.

பள்ளிக் காலத்தில் கபடி வீராங்கனையாக இருந்த நான் மாநில மற்றும் தேசிய அளவில் முதலிடத்தை வென்றுள்ளேன். “2015இல், பி.காம்., படித்தபோது வலு தூக்கும் போட்டி குறித்து அறிந்துகொண்டேன். பின், ‘மிஸ்டர் ஏஷியா’ பட்டம் வென்ற மாஸ்டர், பி.மாயகிருஷ்ணனிடம் பயிற்சி பெற்று போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.’’

  ‘ஸ்குவாட்’ பிரிவில், 182.5 கிலோ எடையைத் தூக்கி, மாநில சாதனையை முறியடித்துள்ளேன். இதற்கு முன், ஒரு வீராங்கனை, 180 கிலோ எடை தூக்கியதே சாதனையாக இருந்தது.

‘வவர் லிப்டிங்’ என்பது பளு தூக்கும் போட்டி. தலைக்குக் கீழ் பகுதி வரை எடையைத் தூக்குவது வலு தூக்குவது. தலைக்கு மேல் தூக்குவது பளு தூக்குதல். வலு தூக்குதலில், ‘ஸ்குவாட், டெட் லிப்ட் மற்றும் பெஞ்ச பிரஸ்’ என மூன்று பிரிவுகளும், பளு தூக்குதலில், ‘கிளின் ஆன் ஜெர்க் மற்றும் ஸ்நாச்’ என்ற இரு பிரிவுகளும் உள்ளன.

“மாநில அளவிலான, 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று, ஆறு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளேன். 2007, 2008 மற்றும் சமீபத்தில் சேலத்தில் நடந்த சீனியருக்கான மாநிலப் போட்டியில் ‘ஸ்குவாட்’ பிரிவில், 182.5 கிலோ எடையைத் தூக்கி, மாநில சாதனையை முறியடித்துள்ளேன். இதற்கு முன், ஒரு வீராங்கனை, 180 கிலோ எடை தூக்கியதே சாதனையாக இருந்தது.

“ஒரு முறை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தும், அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்காததால் பங்கேற்க முடியவில்லை. பஞ்சாபில் இந்த ஆண்டு நடந்த தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றதால், சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். அதில் இந்தியாவிற்காக ஒரு தங்கமாவது வெல்ல வேண்டும்’’ என்றார். சாதிக்க வேண்டும் என்ற அவரின் ஆர்வத்திற்கு அரசு துணை நிற்க வேண்டியது கட்டாயம்.

தகவல் : சந்தோஷ்

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *