ஆசையால் பெற்றோர்
அடியாளாய்ப் பெற்றோர்
கூலிக்காய் பெற்றோர்
கூட்டத்திற்காய் பெற்றோர்
வாரிசுக்குப் பெற்றோர்
வாடகைக்குப் பெற்றோர்
கொள்ளிக்காய் பெற்றோர்
பள்ளிக்காய் பெற்றோர்
பெயர்சொல்லப் பெற்றோர்
பெருமைக்காய் பெற்றோர்
ஆண்மை அறிவிக்க
அவசரமாய்ப் பெற்றோர்
அவனியில் சிலரே
அறிந்து பெற்றோர்.
– மஞ்சை வசந்தன்