நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிரஷர் குக்கரில் விரைவாக சாப்பாடு தயாராவது தெரியும். குக்கரின் மேல் மூடியில் உள்ள ரப்பர் வளையம் எவ்வாறு உருகாமல் அந்த வெப்பத்தைத் தாங்குகிறது என்னும் அறிவியல் நமக்குத் தெரியாது. இதோ, ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்தால், அது 100 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் கொதிக்கத் தொடங்குகிறது. மூடாத பாத்திரத்தில் கொதி நிலையில் நீராவி வெளியேறிவிடுகிறது. கொதிக்கும் நீரில் குறைந்த அழுத்தம் சீராக நிலவுகிறது.
பிரஷர் குக்கரின் தன்மை வேறு விதமானது. அதில் நீர் கொதித்தாலும், அதன் நீராவி சுலபத்தில் வெளியேறுவதில்லை. குக்கரின் அடிப்பாகமும் மேல்பாகமும ஒன்றோடொன்ற டைட்டாக இணைக்கப்பட்டிருப்பதால் இரண்டு பாகங்களுக்குமிடையே உள்ள ‘ரப்பர் கேஸ்கட்’டானது துளிக்கூட காற்று போகாதபடி தடுத்துவிடுகிறது. மேல் மூடியில் உள்ள துவாரத்தையும் நாம் அதன் மீது ‘வெயிட்டை’ பொருத்தி நாம் முழுக்க அடைத்து விடுகிறோம். இதன் காரணமாக கொதிக்கும் தண்ணீரின் நீராவி, சுற்றிச் சுற்றி குக்ககருக்குள்ளேயே சுழல்கிறது. அழுத்தம் அதிகமாகி கொதிநிலை அதிமாகிறது. 120 டிகிரி சென்டிகிரேட் அளவுக்கு வெப்பம் அதிகமாகி, குக்கரின் உள்ளே நிரப்பப்பட்ட சமையல் பொருள்களும் சீக்கிரமே பதப்படுகின்றன. போதிய அழுத்தத்தை அடைத்த பிறகு, வெயிட் சற்றே மேலேழும்ப, அதன் வழியாக அதிகப்படியான நீராவி வெளியேறுகிறது. ‘பிரஷர் குக்கர் கேஸ்கட்’ எனப்படும் ரப்பர் வளையமானது சிலிகான், ரப்பர் ஆகிய இரண்டும் கலந்தது. அதுவும் ‘வைடியான்’ (Vition) என்கிற செயற்கை ரப்பரால் இந்த வளையம் செய்யப்படுகிறது. இது ஒரு தெர்மோ பிளாஸ்டிக். அது 250 டிகிரி செல்சியசுக்கு மேல்தான் உருகத் துவங்கும். எனவேதான் பிரஷர் குக்கரின் ரப்பர் வளையம் உருகுவதில்லை!