‘அப்போது நான்
முழுக்கை சட்டையும்,
கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒரு முறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி
பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்து விட்டார்களாம்
‘நான் பெண் இல்லை’ என்று!’