பதிவுகள்

அக்டோபர் 01-15
  • இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற மறியலைக் கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் செப்டம்பர் 11 அன்று உண்ணாவிரதம் தொடங்கினர். செப்டம்பர் 22 அன்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து  உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றனர்.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல் அமைச்சராக பா-.ஜ.க.வின் பி.சி.கந்தூரி செப்டம்பர் 12 அன்று பொறுப்பேற்றுள்ளார்.
  • அரக்கோணம் அருகே சிக்னலுக்காகக் காத்திருந்த அரக்கோணம் காட்பாடி பயணிகள் ரயில் மீது, பின்னால் வந்த சென்னைக் கடற்கரை – வேலூர் கன்டோன் ரயில் செப்டம்பர் 13 அன்று மோதியதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தற்காலிகமாக (பரோல்) வந்த நாள்களைத் தண்டனைக் காலமாகக் கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 15 அன்று ஆணையிட்டுள்ளது.
  • சிக்கிம் மற்றும் நேபாள எல்லையை மய்யமாகக் கொண்ட சிக்கிம், மேற்கு வங்கம் உள்ளிட்ட இடங்களில் செப்டம்பர் 18 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 112 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஆப்கானிஸ்தானின் மேனாள் அதிபர் பக்ருதீன் ரப்பானி குண்டு வெடிப்பில் செப்டம்பர் 20 அன்று கொல்லப்பட்டார்.
  • முல்லைப் பெரியாறு அணையைக் கூடுதல் வலுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட கேபிள் ஆங்கரிங் பாலம் குறித்து மும்பை பொறியியல் வல்லுநர் குழு செப்டம்பர் 20 அன்று ஆய்வு செய்தது.
  • தனித் தமிழ்ஈழம் அமைப்பதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜெனீவாவில் உள்ளஅய்.நா.சபை அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி செப்டம்பர் 20 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்து செப்டம்பர் 21 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனால் திருச்சி மாநகராட்சிக்குத் தேர்தல் நடைபெறாது என அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் 9 மாநகராட்சிகளுக்கு அக்டோபர் 17ஆம் தேதியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 19ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழக தேர்தல் ஆணையர் அய்யர் செப்டம்பர் 21 அன்று அறிவித்தார்.
  • ஜப்பானில், சுனாமியால் பாதக்கப்பட்ட புகுஷிமா அணுஉலை மீது செப்டம்பர் 22 அன்று கடுமையான புயல் தாக்கியதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிக்கக் கோரி அப்பகுதியின் தலைவர் முகமது அப்பாஸ் அய்.நா பொதுச்செயலாளர் பான்-கி-மூனிடம் செப்டம்பர் 23 அன்று மனு கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *