Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தொலைக் (கொலைக்) காட்சி

மஞ்சை வசந்தன்

 

உடல் முழுக்க

மண் ணெண்ணை

ஊற ஊற்றி,

உரசிவிட்ட தீக்குச்சி

உடல் எரிக்க!

“காப்பாற்ற வருவான்

சூப்பர்மேன்’’ என்று

பிஞ்சு மனம்

பிழையாய் நம்பி

துடி துடிக்க,

மடமைகளை வளர்ப்பதை

கடமையாய்க் கொண்ட

தொலைக்காட்சி

இல்லை இல்லை

கொலைக்காட்சி!

காட்சிப்பெட்டி

இல்லை இல்லை

கயவர்களின்

சூழ்ச்சிப் பெட்டி!